

ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சென்னி மலை, தாளவாடி,பவானி சாகர், கவுந்தப்பாடி ஆகிய பகுதி களில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த செல்வம் மகள் சிவகாமி (வயது 42), சூரம்பட்டி காமராஜ் தெரு வை சேர்ந்த பழனிசாமி மகன் தினேஷ் குமார் (37),
சென்னிமலை ராசம்பாளையத்தை சேர்ந்த ராம சாமி மகன் பூபதி (41), தாள வாடியை சேர்ந்த மாதேஷ் (48), அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வம் (60),
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த சின்னியப்பன் என்ற தங்கராஜ் மகன் கேசவமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.