சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோனர்பாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கோழிகளை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் மணி,

வெள்ளிதிருப்பூரை சேர்ந்த செல்லீஸ்வரன் மகன் விக்னேஷ், நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் கணபதி, மைக்கேல் பாளையம் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர். பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com