என் மலர்tooltip icon

    ஈரோடு

    • முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டம் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துகவுண்டம் ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து ஈரோடு-வெள்ளக்கோவில் ரோடு, முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
    • பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,534 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கரா யன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் 550 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    • வாய்க்காலில் நீச்சல் பழகிய பள்ளி மாணவன் உயிரிழந்தார்
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மகன் சஞ்சை (வயது 17). இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் தனது தந்தை உறவினர் கோபால் உதவியுடன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீச்சல் பழகினார். அப்போது இடுப்பில் இருந்த கயிறு திடீரென்று அவிழ்ந்ததால் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சையின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவகிரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட காகம் கொளத்துப்பாளையம் வாய்க்கால்கரை அருகே எல்லக்கடை செல்லும் சாலையில் அரசு அனுமதி பெறாமல் மதுவிற்பனை நடைபெறுவதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்த செல்லப்பன் மகன் பழனிசாமி (வயது 42) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 8 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக பழனிசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்ட்ரிங் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்
    • புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    கோவை மாவட்டம் வெள்ள க்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சிவராமன் (வயது 42). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று சென்னிமலை முதலைமடை எல்.பி.பி வாய்க்கால் பாலம் அருகே நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவரது சகோதரி சிவ லட்சுமி சென்னிமலை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங் கோவில் பகுதியை சேர்ந்த வர் ராமசாமி (வயது 64). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள மாடி படி கட்டின் அருகே வைத்து விட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். இதையடுத்து அவர் மறு நாள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைத்து இருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் 20 பவுன் நகையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் மாடி படியில் வைத்து இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோ வில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் வீட்டின் சாவியை பக்கத்து மாடியில் எரிந்து விட்டு சென்று உள்ளனர். இது குறித்து ராமசாமி சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலையில் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், கொடி வேரி அணை, பவானிசாகர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வரட்டு பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. இதேபோன்று பவானி, பவானிசாகர், சத்தியம ங்கலம், கோபி, பெருந்துறை, அம்மா பேட்டை, கவுந்தப்பாடி, நம்பியூர் போன்ற பகுதிகளி லும் பரவலாக மழை பெய்த து. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதே போல் தாளவாடி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வரட்டு பள்ளம்-37, பவானி-28, பவானி சாகர்-19.20, குண்டேரி பள்ளம்-15.80, கொடிவேரி அணை-11, சத்தியம ங்கலம்-10, கோபி-8.20, பெருந்துறை-8, அம்மா பேட்டை-6, கவுந்தப்பாடி-4, நம்பியூர்-3, தாளவாடி, மொடக்குறிச்சி -1.

    • குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • உணவு பாதுகாப்பு துறையினர் ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

    டி.என்.பாளையம்,

    டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் சோதனையில் ஈடுப ட்டனர். அப்போது டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈஸ்வரன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

    அதைத்தொடர்ந்து ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் சக்திவேல் கூறியதாவது; மளிகை கடையில் தரம் குறைவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 94 440423 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 30). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் துணை மேலா ளராக பணியாற்றி வந்தார். இவர் பெருந்துறை சென்னி மலை ரோட்டுப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் சிவரஞ்சனி நீண்ட நாட்களாக வரன் அமையாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராமு தனது மகள் சிவரஞ்சனிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் சிவரஞ்சனி வீட்டிற்கு செல்லாததால பெருந்துறையில் மகள் தங்கி இருந்த வீட்டிற்கு ராமு மற்றும் அவரது மகன் சென்றனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு சிவரஞ்சனி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து ராமு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் தனது மகளுக்கு வரன் அமையாததால் மன வருத்தத்தில் ஏதோ சாப்பிட்டு இருந்திருக்கலாம் என புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்க ர்நாடகா மாநி லம் பெங்களூரை சேர்ந்தவர் ரேகா (40). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தர்ஷினி (19). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நடனக் குழுவில் நடனம் ஆடு பவர் ஆவார். இந்நிலையில் தர்ஷினி தூக்குமாட்டி இறந்து விட்டதாக ரேகாவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து ரேகா மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
    • பவானிசாகர் அணை பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொ ட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் குடு ம்பத்து டன் வந்து தடுப்பணையில் குளி த்து மகிழ்ந்து செல்கி றார்கள்.

    இந்த நிலையில் சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்று க்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர்.

    காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப் பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடு ம்பத்துடன் வந்திருந்த னர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த னர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர். இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இய ற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ×