காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளதுபவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,534 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கரா யன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் 550 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com