என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை-அதிகபட்சமாக 37 மி.மீ. பதிவு
    X

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை-அதிகபட்சமாக 37 மி.மீ. பதிவு

    • ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலையில் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், கொடி வேரி அணை, பவானிசாகர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வரட்டு பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. இதேபோன்று பவானி, பவானிசாகர், சத்தியம ங்கலம், கோபி, பெருந்துறை, அம்மா பேட்டை, கவுந்தப்பாடி, நம்பியூர் போன்ற பகுதிகளி லும் பரவலாக மழை பெய்த து. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதே போல் தாளவாடி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வரட்டு பள்ளம்-37, பவானி-28, பவானி சாகர்-19.20, குண்டேரி பள்ளம்-15.80, கொடிவேரி அணை-11, சத்தியம ங்கலம்-10, கோபி-8.20, பெருந்துறை-8, அம்மா பேட்டை-6, கவுந்தப்பாடி-4, நம்பியூர்-3, தாளவாடி, மொடக்குறிச்சி -1.

    Next Story
    ×