என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார்.
    • போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நத்தம்:

    மதுரை அய்யர்பங்களா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது காளையார் கோவிலைச் சேர்ந்த பிரபு (வயது 30) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அதனால் அவருக்கு அபராதம் விதித்தனர். இதனையடுத்து பிரபு தனது நண்பர்களிடம் போலீசில் சிக்கிக் கொண்டது குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென பிரபு தனது பைக்கை வைத்து விட்டு போலீஸ்காரரின் பைக்கை லாவகமாக திருடிச் சென்று விட்டார்.

    மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார். இது குறித்து போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் இவர்கள் அசுர வேகத்தில் வந்த போது எதிரே நின்ற தனியார் பஸ் மீது மோதினர். இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் மதுரை போலீஸ்காரரின் பைக்கை திருடியது தெரியவந்தது. உடனே நத்தம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபாகரன்(23) சந்தோஷ் (22) ஆகாஷ் (20) ஆகிய 3 பேரும் இட பிரச்சினை காரணமாக நெல்சனுடன் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் தலை, முகத்தில் பலத்த காயம் அடைந்த நெல்சன் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    நெல்சன் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்சனை தாக்கிய 3 இளைஞர்களும் அடுத்த தெருவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் பாண்டி (55) என்பவர் வீட்டிற்கு சென்று உள்ளே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் கேட்டை உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் தட்டி கேட்ட போது நெல்சனை தாக்கியது போன்று உன்னையும் தாக்குவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக பாண்டி தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரிலும் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.2500க்கு விற்பனையாகிறது.
    • அய்யலூர் சந்தையிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் மார்க்கெட் வெறிச்சோடியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் உழவர் சந்தைக்கு அய்யலூர், வடமதுரை, எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த வாரம் வரை 2.50 டன் விற்பனைக்கு வந்த நிலையில் கிலோ ரூ.40க்கு விற்பனையானது. ஆனால் தற்போது அந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் நின்றது.

    பெங்களூர் தக்காளி மட்டுமே வருகிறது. இதனால் 1 கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. இன்று உழவர் சந்தைக்கு 1200 கிலோ தக்காளி வந்தது. இந்த தக்காளி வெளி மார்க்கெட்டி ல் ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. தெருக்களில் உள்ள கடைகளில் 100 கிராம் தக்காளி ரூ.20க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.2500க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் அய்யலூர் சந்தையிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் மார்க்கெட் வெறிச்சோடியது. வெளி மாநில தக்காளி மட்டுமே குறைந்த அளவு வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1350க்கு விற்பனையாகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அய்யலூர் மார்க்கெட் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களை கண்டுகொள்ள அதிகாரிகள் முன்வருவதில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிடுவதால் விவசாய பணிகளுக்கு ஆள் கிடைப்பதில்லை. இருந்தபோதும் இக்கட்டான நிலையில் விளை பொருட்களை உற்பத்தி செய்தால் அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை. பற்றாக்குறையான காலங்களில் வெளி மாநில காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசனை அனுபவிக்க அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்பட பல்வேறு இடங்களில் மேக கூட்டங்களுக்கு இடையே இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி ஆகியவை முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும், குதிரை சவாரி மேலும் சிலர் நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனர்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறை, வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடைக்கானல் செண்பகனூர் பெட்ரோல் மையம் முதல் ஏரிச்சாலை வரை 6கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    • பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
    • முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பழனி:

    பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.

    தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.

    இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.

    முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது.
    • வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை வெட்ட தயார் நிலையில் வைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக துள்ளிக்குதித்து ஓடியது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் இன்று பக்ரீத் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் சிறப்பாக பல்வேறு இடங்களில் ஆடு, மாடு ஆகியவை குர்பாணி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பலர் வீடுகளிலேயே ஆடுகளை வாங்கி வளர்த்து அதன் இறைச்சியை வெட்டி 3 பகுதிகளாக பிரித்தனர். ஒரு பகுதியை உறவினர்களுக்கும், 2ம் பகுதியை இயலாதவர்களுக்கும் வழங்கி விட்டு மீதமுள்ள பகுதியை தங்கள் வீட்டுக்கு பயன்படுத்தி கொள்வதே குர்பாணி எனப்படுகிறது.

    திண்டுக்கல் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை வெட்ட தயார் நிலையில் வைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக துள்ளிக்குதித்து ஓடியது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தில் ஆடு சிக்கியதால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

    மின் கம்பியில் சிக்கிய ஆட்டின் 4 கால்களும் கருகி உயிருக்கு போராடியது. உடனடியாக ஏணியை வைத்து ஆட்டை குச்சி மூலம் கீழே தள்ளினர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் எம்.கே.எஸ். நகரில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
    • நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நத்தம்:

    தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.க நிர்வாகிகளான வேலம்பட்டி கந்தசாமி, கொசவபட்டி மரிய ஆரோக்கியம், பூசாரிபட்டி உத்தமன், கண்ணமனூர் கனகராஜ், ராகலாபுரம் சரவணன் ஆகிய 5 பேரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    • தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
    • கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.
    • நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா ஆகிய அருவிகளை கண்டு ரசித்து அருகில் நிற்பதுபோல் செல்பி எடுத்துக் கொண்டனர். வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.

    குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனூர், சுழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் இதமான சீதோசனம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். வாரவிடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடை சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைவாக காணப்படும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    பழனி முருகன் கோவிலுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சரவணப்பொய்கை மற்றும் மலையடிவாரத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மொட்டை அடிக்கக்கூடிய பக்தர்களுக்கு இணைய வழியில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுவதால் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இணைய சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் மொட்டை அடிக்க டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் வழங்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய இணைய சேவை பாதிப்பின் காரணமாக இது போன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணைய சேவை சரி செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் மொட்டை அடித்துச் சென்றனர். 

    • படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
    • மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மேலும் நாளை (26ந் தேதி) பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

    இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

    • தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார்.
    • சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை பேரையூரை சேர்ந்த குப்பாபுலி மகன் வாசுராஜா(23). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். அப்போது அதேகல்லூரியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற வாசுராஜா மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

    இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன் அவருடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.

    இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

    ×