கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாணவர் கைது

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார். சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார்.
கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாணவர் கைது
Published on

குள்ளனம்பட்டி:

மதுரை பேரையூரை சேர்ந்த குப்பாபுலி மகன் வாசுராஜா(23). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். அப்போது அதேகல்லூரியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற வாசுராஜா மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன் அவருடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.

இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com