என் மலர்
திண்டுக்கல்
- வக்கீல்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பும், நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
- வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பாக வக்கீல்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பும், நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கு தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திண்டுக்கல் வக்கீல்கள் சங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றியதற்காக தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் குழுமம் சேர்மன் நந்தகுமார் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் துணைத்தலைவர் குமரேசன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரேமா உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- பழனி உடுமலை சாலை வளைவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கடந்த சில நாட்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
- இதனால் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி ரணகாளியம்மன் கோவில் அருகே நால்ரோடு பகுதி உள்ளது. நகர் பகுதியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் இந்த நால்ரோடு பகுதியில் பழனி- தாராபுரம், பழனி-உடுமலை, பழனி நகர் உள்ளிட்ட சந்திப்புகள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இங்கு பழனி உடுமலை சாலை வளைவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நால்ரோடு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பழனிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட மையம் தனியாருக்கு வாடகைக்கு விட்டதால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- அதிகாரிகள் செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி தலைமையில் 2 கேட்டுகளிலும் பூட்டு போட்டனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேனன்கோட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முருங்கை, காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகள் சீசன் காலங்களில் போதிய விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்பதை தவிர்க்கும் வகையில், ரூ.2.50 கோடி மதிப்பில் குளிர்சாதன கிட்டங்கி அமைக்கப்பட்டது.
ஆனால் குளிர்சாதன எந்திரங்கள் வந்து சேராததால் திறப்பு விழா தள்ளிப்போனது. அதன் பிறகு எந்திரங்கள் வந்து சேர்ந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வேடசந்தூர், சுற்றுப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை இந்த கிட்டங்கியில் குறைந்த கட்டணத்தில் வைத்திருந்து விலை கூடும் சமயங்களில் அதனை விற்று லாபம் பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த மையத்தை நூற்பாலை நிர்வாகத்துக்கு நூல்களை பாதுகாக்கும் குடோனாக பயன்படுத்த அதிகாரிகள் வாடகைக்கு விட்டனர்.
விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட மையம் தனியாருக்கு வாடகைக்கு விட்டதால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் அதிகாரிகள் செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி தலைமையில் 2 கேட்டுகளிலும் பூட்டு போட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து கட்டிடத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- கே.சி.பட்டியில் உள்ள பஸ் நிறுத்துமிடம் மற்றும் தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது. சிறியவர்கள், முதியோர் மற்றும் பயணிகள் பயந்து செல்கின்றனர்.
- உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தொற்றுநோயுடன் சுற்றி வரும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, மங்களம் கொம்பு, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி. கே.சி.பட்டி போன்ற பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவை தெருக்களில் வலம் வந்து சாலையில் நடந்து செல்பவர்களையும், சிறுவர்களையும் துரத்தி ச்சென்று கடித்து குதறுவ தாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக வருபவர்க ளையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. வாகனங்க ளை பின் தொடர்ந்து விரட்டுகிறது. இதனால் பதட்டமடையும் வாகன ஓட்டிகள் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
கடந்த சில நாட்களாக கே.சி.பட்டியில் உள்ள பஸ் நிறுத்துமிடம் மற்றும் தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறியவர்கள், முதியோர் மற்றும் பயணிகள் பயந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தெருநாய்களின் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். தொற்றுநோயுடன் சுற்றி வரும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நாய்க ளிடம் இருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோழியின் தலை கால்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு அம்பேத்கர் சிலையிலிருந்து கோஷமிட்டவாரு சாலை தெருவில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வரை நடந்து சென்று மனு அளித்தார்.
- மனுவில் பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை ரோட்டில் கொட்டும் கோழிக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் ஏராளமான கோழி இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மீதமாகும் குடல்கள், தலை, கால் போன்றவற்றை கடை உரிமையாளர்கள் மாரம்பாடி குப்பை கிடங்கின் அருகே ரோட்டில் கொட்டி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இதனை உண்ணும் நாய்கள் வெறி பிடித்து ஆடு, மாடுகளை கடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் கோழியின் தலை கால்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு அம்பேத்கர் சிலையிலிருந்து கோஷமிட்டவாரு சாலை தெருவில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வரை நடந்து சென்று மனு அளித்தார்.
மனுவில் பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை ரோட்டில் கொட்டும் கோழிக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடசந்தூர் பகுதி முழுவதும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மோகன், வடமதுரை ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ், ஒன்றிய தலைவர் ஐயப்பன், செயலாளர் ஜீவா, நகரத் தலைவர் மலைச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
- இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் அகல்யா (வயது 18). இவர் 2014 செப்டம்பர் 18-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். கன்னிமார்புரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் இருந்து திடீரென அகல்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் படிப்பை தொடர முடியாமல் போனது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் அகல்யா தனக்கு இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் சார்பு நீதிபதி சரவணகுமார் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் செல்லச்சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
- 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
- 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜாராமன் மகன் நிஷாந்த் (வயது 22), கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (30) என்பதும் 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்த், தமிழ் செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.
- பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது.
- கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போனை மலைக்கோவிலில் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடிவாரத்திலேயே செல்போன் வைப்பறை தொடங்கப்பட்டு அதில் பக்தர்கள் தங்கள் செல்போனை கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் வழக்கம் போல் செல்போனுடன் மலைக்கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.
கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகளையும் வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர்.
அதனுடன் தங்கள் குடும்பத்தினரையும் இணைத்து வீடியோ வெளியாவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால் இங்குள்ள முருகனை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால் கடவுள் வழிபாட்டில் அதன் புனிதத்தை உணராமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் இதனை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தபோதும் அதனை பலர் கடைபிடிப்பதில்லை. இனிமேலாவது கோவில் நிர்வாகம் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத், மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இச்சிலையை காண பல்லாயிரம் கி.மீ. நடை பயணமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கும்பாபிஷேகத்துக்கு முன்பு வரை பழனி மலைக்கோவில் பகுதியில் மூலவர் சிலையை படம் பிடித்தால் செல்போன்கள் பறிக்கப்படும் என பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அதை காண முடியவில்லை.
மேலும் கால பூஜை வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு சிலர் ஆர்வத்தால் மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் இதுபோன்று மூலவர் படம் பிடித்தால் அவர்கள் செல்போன் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த பீட்டர் மகள் மைதிலி ஆண்ட்ரியா (வயது 19). இவர் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர்
- விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர். கிரிக்கெட் போட்டியை வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.முதல் 5 இடங்களை பிடித்தவர்க ளுக்கு பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்ப ட்டது. இறுதிப் போட்டியில் போடி உப்புகோட்டை அணியும்,விராலிப்பட்டி அணியும் மோதின. இதில் போடி உப்புக்கோட்டை வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ. முதலிடம் பிடித்த போடி உப்புக்கோட்டை அணிக்கு பரிசுத் தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை வழங்கினார். மேலும் 2-ம் இடம் பிடித்த விராலிப்பட்டி அணிக்கு பரிசுத்தொகை ரூ.12500 மற்றும் சுழற் கோப்பையையும் வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் சிவக்குமார், நரசிம்மன், சந்திரசேகர், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டி ஏற்பாடுகளை கிஷோர்கி ருத்திகா ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் செய்திருந்தனர்.
- குறைந்த அளவு முருங்கை வரத்தின்போது அதிக விலைக்கும், அதிக முருங்கை வரத்தின்போது மிகக்கு றைந்த விலைக்கும் விவசாயி களிடம் இருந்து வியாபாரி கள் வாங்குகிறார்கள்.
- முருங்கை விதையில் இருந்து எண்ணெய் தயாரிப்பதும் மற்றும் முருங்கை பவுடர் தயாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் அரசின் சார்பில் முருங்கை விதை எண்ணெய் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சத்திரப்பட்டி, பொருளுர், தொப்பம்பட்டி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம், கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஏரளமான கிராமப்பகுதி களில் மரம் மற்றும் செடி முருங்கை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
விளைவிக்கப்படும் முருங்கையை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.
இங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவு முருங்கை வரத்தின்போது அதிக விலைக்கும், அதிக முருங்கை வரத்தின்போது மிகக்கு றைந்த விலைக்கும் விவசாயி களிடம் இருந்து வியாபாரி கள் வாங்குகிறார்கள்.
இதனால் சராசரியான விலை வருடம் முழுவதும் கிடைக்காததாலும் அதிக வரத்தின்போது முருங்கையை வியாபாரிகள் வாங்க முன்வராததால் கால்நடை தீவனமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற சமயங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசின் சார்பில் முருங்கை விதையில் இருந்து எண்ணெய் தயாரிப்பதும் மற்றும் முருங்கை பவுடர் தயாரித்தும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணி முடிவுற்ற நிலையில் பல நாட்களாக தற்போது வரை சாலையிலேயே ஜல்லிக்க ற்கள் கொட்டி கிடக்கிறது.
- பெரும் விபத்து நடந்து உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சாலையேராம் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்து இடையக்கோட்டை அருகே உள்ள புல்லாகவுண்டனூரில் தாடிக்கொம்பு செல்லும் சாலையோரத்தில் கருமலையில் இருந்து வரும் ஓடையில் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையில் எம்சான்ட் மணல் மற்றும் ஜல்லி கற்கள் கொட்டி வைத்துள்ளனர். பணி முடிவுற்ற நிலையில் பல நாட்களாக தற்போது வரை சாலையிலேயே ஜல்லிக்க ற்கள் கொட்டி கிடக்கிறது.
இதனால் இரவு நேரங்க ளில் இரு சக்கர வாகன ங்களில் வருபவர்களுக்கு எதிரே அதிக முகப்பு வெளிச்சத்துடன் பஸ், லாரி வரும்போது சாலையோரம் கொட்டப்பட்டுள்ள எம் சான்ட் மணல் மற்றுல் ஜல்லி குவியல்கள் மேல் வாகனங்களை விட்டு தடுமாறி காயங்களுடன் எழுந்து சென்று வருகின்ற னர்.
இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிர மத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பெரும் விபத்து நடந்து உயிர் சேதங்கள் ஏற்படுவ தற்கு முன்பு சாலையேராம் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






