search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Agriculture Building"

    • விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட மையம் தனியாருக்கு வாடகைக்கு விட்டதால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • அதிகாரிகள் செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி தலைமையில் 2 கேட்டுகளிலும் பூட்டு போட்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேனன்கோட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முருங்கை, காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகள் சீசன் காலங்களில் போதிய விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்பதை தவிர்க்கும் வகையில், ரூ.2.50 கோடி மதிப்பில் குளிர்சாதன கிட்டங்கி அமைக்கப்பட்டது.

    ஆனால் குளிர்சாதன எந்திரங்கள் வந்து சேராததால் திறப்பு விழா தள்ளிப்போனது. அதன் பிறகு எந்திரங்கள் வந்து சேர்ந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    வேடசந்தூர், சுற்றுப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை இந்த கிட்டங்கியில் குறைந்த கட்டணத்தில் வைத்திருந்து விலை கூடும் சமயங்களில் அதனை விற்று லாபம் பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த மையத்தை நூற்பாலை நிர்வாகத்துக்கு நூல்களை பாதுகாக்கும் குடோனாக பயன்படுத்த அதிகாரிகள் வாடகைக்கு விட்டனர்.

    விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட மையம் தனியாருக்கு வாடகைக்கு விட்டதால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் அதிகாரிகள் செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி தலைமையில் 2 கேட்டுகளிலும் பூட்டு போட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து கட்டிடத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    ×