என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கை விதை எண்ணெய் தொழிற்சாலை"

    • குறைந்த அளவு முருங்கை வரத்தின்போது அதிக விலைக்கும், அதிக முருங்கை வரத்தின்போது மிகக்கு றைந்த விலைக்கும் விவசாயி களிடம் இருந்து வியாபாரி கள் வாங்குகிறார்கள்.
    • முருங்கை விதையில் இருந்து எண்ணெய் தயாரிப்பதும் மற்றும் முருங்கை பவுடர் தயாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் அரசின் சார்பில் முருங்கை விதை எண்ணெய் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சத்திரப்பட்டி, பொருளுர், தொப்பம்பட்டி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம், கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஏரளமான கிராமப்பகுதி களில் மரம் மற்றும் செடி முருங்கை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    விளைவிக்கப்படும் முருங்கையை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.

    இங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    குறைந்த அளவு முருங்கை வரத்தின்போது அதிக விலைக்கும், அதிக முருங்கை வரத்தின்போது மிகக்கு றைந்த விலைக்கும் விவசாயி களிடம் இருந்து வியாபாரி கள் வாங்குகிறார்கள்.

    இதனால் சராசரியான விலை வருடம் முழுவதும் கிடைக்காததாலும் அதிக வரத்தின்போது முருங்கையை வியாபாரிகள் வாங்க முன்வராததால் கால்நடை தீவனமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற சமயங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசின் சார்பில் முருங்கை விதையில் இருந்து எண்ணெய் தயாரிப்பதும் மற்றும் முருங்கை பவுடர் தயாரித்தும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×