என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்"

    • வக்கீல்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பும், நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
    • வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பாக வக்கீல்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பும், நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கு தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திண்டுக்கல் வக்கீல்கள் சங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றியதற்காக தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் குழுமம் சேர்மன் நந்தகுமார் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

    வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் துணைத்தலைவர் குமரேசன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரேமா உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    ×