நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்

திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த பீட்டர் மகள் மைதிலி ஆண்ட்ரியா (வயது 19). இவர் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com