என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது. விவசாயத்திற்கு பெரியகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம், மணியக்காரர் சின்னப்பன், கோவில்பிள்ளை சின்னப்பன், ஊர் நிர்வாகிகள் காமராஜ், சரவணன் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் வான வேடிக்கையுடன் பெரியகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி, பெரியகோட்டை மற்றும் திருச்சி, மணப்பாறை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக பெரியகுளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதோடு, தங்கள் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விருந்தோம்பலை போற்றி கொண்டாடினர்.

    • மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் அரசு வேலைக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளுக்கு இப்போது முதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணினி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் படித்துக் கொண்டே பெற முடியும்.
    • இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

    கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். தமிழ்த்துறையின் தலைவர் சங்கரழகு சிறப்பு விருந்தின ருக்கு பொன்னாடைப் போர்த்தினார். கணினி பயன்பாட்டியல் துறையின் தலைவர் பானுசித்ரா நினைவுப்பரிசினை வழங்கினார். 3-ம் ஆண்டு கணினி மாணவி திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    மதுரை கல்வி குரூப் கம்பெனி மற்றும் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்க்கைக்கு துணிவு மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். எதையும் செய்வதற்கு முன்பு தீர்க்கமான முடிவுடன் துணிந்து செயல்பட வேண்டும். எவ்வித சோதனையும் எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் அரசு வேலைக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளுக்கு இப்போது முதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணினி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் படித்துக் கொண்டே பெற முடியும். நான் இளமையில் பெற்றோரிடமிருந்து பொருளாதார எதிர்பார்ப்பு இல்லாமல் நானே முயற்சி செய்து படிப்படியாக 23 பட்ட மேற்படிப்பு களை பல்வேறு நாடுகளில் கற்றுக்கொண்டேன்.

    இதற்கு காரணம் எனது பெற்றோர். நிறைய தொழில் சார்ந்த மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளும் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசினார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். பாபிநாத் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சா லை யில் வடமதுரை அருகே மூக்கரைபிள்ளையார் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
    • போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    கும்பகோணத்தை சேர்ந்தவர் வடிவேல் (50). இவர் ஒரு ஜீப்பில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜீப்பை வடலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்தார். ஜீப்பில் இவர்களுடன் மேலும் 2 பேர் வந்தனர். திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சா லை யில் வடமதுரை அருகே மூக்கரைபிள்ளையார் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.

    இதில் வடிவேல், பாலமுருகன் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை அங்கிருந்து மீட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழ க்கிழமை தோறும் ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, கோழி, காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புது க்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7500 முதல் ரூ.9000 வரை விற்பனையானது. குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆட்டுக்குட்டிகள் ரூ.3000க்கு விலை கேட்கப்பட்டது. இளம் நாட்டு கோழிகள் கிலோ ரூ.350க்கு விற்பனையானது.

    அய்யலூர் சந்தையில் பல வருடங்களாக வியா பாரிகள், விவசாயிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளி மாவட்ட ங்களில் இருந்து அ திக அளவில் வருகின்றனர். இங்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    ஆனால் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சந்தையை எடுத்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    திண்டுக்கல்:

    பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஓய்வூதியர் சங்கங்களின் இணைப்புக்குழு அழைப்பின் பேரில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் படி இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    15 சதவீத பென்சன், 1.1.2017ம் ஆண்டு முதல் வழங்கிட வேண்டும். பென்சன் மாற்றம், சம்பள மாற்றத்துடன் இணைப்பு செய்து கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையின் அதிகார தளத்தை களைந்திட வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கிளை துணைத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஜான்போர்ஜியா, கிளைச்செயலாளர் ஜோதிநாதன், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைத்தலைவர் அய்யனார்சாமி, கிளைத்துணை ச்செயலாளர்கள் வைத்திலிங்க பூபதி, கிறிஸ்டோபர், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

    • திண்டுக்கல்லில் இருந்து ஒத்தக்கடை செல்லும் தனியார் பஸ்ஸில் கொசவபட்டி பள்ளியில் பயிலும் மாணவர்களும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.
    • அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு வருகிறார்கள். இதனால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். திண்டுக்கல்லில் இருந்து பண்ணைபட்டிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர். படியில் பயணம் நொடியில் மரணம் என்பார்கள்.

    ஆனால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்தது பார்ப்பவர்களை பதற வைக்கிறது. இதேபோல் சாணார்பட்டி பகுதியிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து ஒத்தக்கடை செல்லும் தனியார் பஸ்ஸில் கொசவபட்டி பள்ளியில் பயிலும் மாணவர்களும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. பாரம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

    எனவே டிரைவர், கண்டக்டர்கள் மாணவ- மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.இதேபோல் அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் இடத்தில் 2 தெருநாய்கள் நிரந்தரமாக தங்கியுள்ளன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை விரட்டி கடிப்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்க வந்தால் அலுவலகத்திலேயே நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரி செலுத்துவதற்கு மற்றும் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு அலுவலர்களும் வேலை பார்த்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு 2 நுழைவு வாயில்கள் உள்ளன.

    பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் இடத்தில் 2 தெருநாய்கள் நிரந்தரமாக தங்கியுள்ளன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை விரட்டி கடிப்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வருபவர்கள் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.

    அங்கு பணிபுரிபவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தால் நாய்கள் ஒன்றும் செய்யாது என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றது. இதனால் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நகர் பகுதியில் உள்ள முக்கியமான வீதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிப்பது, கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்க வந்தால் அலுவலகத்திலேயே நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. எனவே இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆகஸ்டு 10-ந் தேதி ஆடி லட்சார்ச்சனை புரஸ்சரண ஹோமம் நடைபெறும்.
    • ஆகஸ்டு 11-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் இரவு 8.30 மணிக்கு ரத வீதிகளில் வெள்ளித் தேர் உலாவும் நடைபெறும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நிர்வாகத்தின் கீழ் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் லட்சார்ச்சனை பூஜை நடைபெறும். இந்த வருடம் வருகிற ஜூலை 17-ந் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்க உள்ளது. ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி வரை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை பூஜை நிறைவு பெறும்.

    நாள் ஒன்றுக்கு 4000 அர்ச்சனைகள் வீதம் 1 லட்சம் அர்ச்சனைகள் செய்யப்படும். ஆகஸ்டு 10-ந் தேதி ஆடி லட்சார்ச்சனை புரஸ்சரண ஹோமம் நடைபெறும். ஆகஸ்டு 11-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் இரவு 8.30 மணிக்கு ரத வீதிகளில் வெள்ளித் தேர் உலாவும் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.
    • மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழியாக வெளி ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்கிறது. இதனால் செம்பட்டி பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தேனியில் இருந்து செம்பட்டி வழியாக, பழனிக்கு செல்லும் ஒரு தனியார் பஸ் 4 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும்.

    அதேபோல் மதுரையில் இருந்து வரும் மற்றொரு தனியார் பஸ் செம்பட்டி வழியாக பழனிக்கு செல்லும் போது 4.10 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.

    இதனால், மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர். 2 பஸ்களையும் திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ்கள் பெரும் சிரமத்திற்கு இடையே கடந்து சென்றது.

    • பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.
    • பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    பழனி 11வது வார்டு பெரியகடை வீதி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் தொடர்ந்து அப்பகுதியில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு குடிபோதையில் யாரா இருந்தாலும் வெட்டுவேன் என மிரட்டி பேசி வந்துள்ளார்.

    மேலும் தனது வீட்டில் முன்பு அரிவாளை வைத்துக் கொண்டு சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவது போல அமர்ந்து கொண்டு யாரும் இந்த தெருவை கடந்து செல்லக்கூடாது. மீறினால் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். இவரது மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். கோவில் நகரான பழனியில் இது போன்ற நபர்களால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

    எனவே இவரைப் போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் விசாரணைக்கு சென்ற போலீசாரை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு சான்றுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை தரும் அலுவலகத்தில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது.
    • தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களுக்கு லைசென்ஸ் எடுக்க, புதுப்பிக்க, பல்வேறு சான்றுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது.

    உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாவகமாக சாரைப்பாம்பை பிடித்தனர். இதனை தொடர்ந்து லைசென்ஸ் எடுக்க வந்த ஒரு மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பாம்பு சுருண்டு கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதி இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாக மாறி காணப்படுகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள முட்செடிகள் அகற்றப்படாமல் இருப்பதாலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருவதாலும் பாம்புகள் படையெடுத்து வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    எனவே இப்பகுதியை பாதுகாப்பு இடமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ரூ.13,848 வழங்கவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ரூ.11,848 சம்பளம் வழங்கவேண்டும். இதரப்படிகள் மற்றும் கொரோனா கால ஊக்கத்தொகை உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருசாமி வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், குழந்தைராஜ், போஸ், நந்தகோபால், பழனிச்சாமி, அருளானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநில தலைவர் கிருஷ்ணசாமி நிறைவுரை ஆற்றினார். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×