search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்.

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ரூ.13,848 வழங்கவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ரூ.11,848 சம்பளம் வழங்கவேண்டும். இதரப்படிகள் மற்றும் கொரோனா கால ஊக்கத்தொகை உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருசாமி வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், குழந்தைராஜ், போஸ், நந்தகோபால், பழனிச்சாமி, அருளானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநில தலைவர் கிருஷ்ணசாமி நிறைவுரை ஆற்றினார். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×