என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refresher training for first year student"

    • மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் அரசு வேலைக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளுக்கு இப்போது முதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணினி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் படித்துக் கொண்டே பெற முடியும்.
    • இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

    கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். தமிழ்த்துறையின் தலைவர் சங்கரழகு சிறப்பு விருந்தின ருக்கு பொன்னாடைப் போர்த்தினார். கணினி பயன்பாட்டியல் துறையின் தலைவர் பானுசித்ரா நினைவுப்பரிசினை வழங்கினார். 3-ம் ஆண்டு கணினி மாணவி திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    மதுரை கல்வி குரூப் கம்பெனி மற்றும் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்க்கைக்கு துணிவு மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். எதையும் செய்வதற்கு முன்பு தீர்க்கமான முடிவுடன் துணிந்து செயல்பட வேண்டும். எவ்வித சோதனையும் எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் அரசு வேலைக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளுக்கு இப்போது முதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணினி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் படித்துக் கொண்டே பெற முடியும். நான் இளமையில் பெற்றோரிடமிருந்து பொருளாதார எதிர்பார்ப்பு இல்லாமல் நானே முயற்சி செய்து படிப்படியாக 23 பட்ட மேற்படிப்பு களை பல்வேறு நாடுகளில் கற்றுக்கொண்டேன்.

    இதற்கு காரணம் எனது பெற்றோர். நிறைய தொழில் சார்ந்த மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளும் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசினார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். பாபிநாத் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×