என் மலர்
நீங்கள் தேடியது "சென்டர் மீடியனில் ஜீப்மோதியது"
- திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சா லை யில் வடமதுரை அருகே மூக்கரைபிள்ளையார் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
- போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
கும்பகோணத்தை சேர்ந்தவர் வடிவேல் (50). இவர் ஒரு ஜீப்பில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜீப்பை வடலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்தார். ஜீப்பில் இவர்களுடன் மேலும் 2 பேர் வந்தனர். திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சா லை யில் வடமதுரை அருகே மூக்கரைபிள்ளையார் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
இதில் வடிவேல், பாலமுருகன் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை அங்கிருந்து மீட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு ஒழுங்குபடுத்தினர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.






