என் மலர்
நீங்கள் தேடியது "விரட்டி கடிக்கும் வெறிநாய்கள்"
- பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் இடத்தில் 2 தெருநாய்கள் நிரந்தரமாக தங்கியுள்ளன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை விரட்டி கடிப்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
- இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்க வந்தால் அலுவலகத்திலேயே நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரி செலுத்துவதற்கு மற்றும் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு அலுவலர்களும் வேலை பார்த்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு 2 நுழைவு வாயில்கள் உள்ளன.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் இடத்தில் 2 தெருநாய்கள் நிரந்தரமாக தங்கியுள்ளன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை விரட்டி கடிப்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வருபவர்கள் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.
அங்கு பணிபுரிபவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தால் நாய்கள் ஒன்றும் செய்யாது என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றது. இதனால் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நகர் பகுதியில் உள்ள முக்கியமான வீதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிப்பது, கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்க வந்தால் அலுவலகத்திலேயே நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. எனவே இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






