என் மலர்
திண்டுக்கல்
- விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் தலா ரூ. 24.96 மதிப்பீட்டில் பூச்சி நாயக்கன்பட்டி, சவேரியார் பாளையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ஹசீனா பர்வீன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
- கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர்.
- மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
இதில் மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
- கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
- 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் ஆட்சி குழு தலைவர் டாக்டர் மதிச்செல்வன், பள்ளி தாளாளர் முருகேசன் நாடார் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத் தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் துரை சங்கத்தின் செயல் திட்டங்களை விளக்கி கூறினார். உதவி தலைவர் சண்முகவேலு சென்ற ஆண்டு கூட்டத் தீர்மானங்களை பற்றி வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
நன்றாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய நல்லாசிரியர் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தனபாண்டியன் பிறந்த நாள், ஆசிரியர் தினநாள், முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்சங்க ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் தலைமை ஆசிரியர் நடராஜன் உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மதி தேவராஜ் நன்றி கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி ஜூன் 20ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனை அலங்காரம் செய்து கரகாட்டத்துடன், மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி, பெரிய கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கடுகாபட்டி, சரளப்பட்டி, சின்ன கோம்பைபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட் வரை உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த நெசவாளர் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு மிரட்டும் மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.
பழனி:
பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக சுத்தமான பரா மரிப்பு, நவீன சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. கடந்த 2022-ல் 1 லட்சத்து 11 ஆயிரத்து 800 வெளி நோயாளிகளும், 1,087 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் வரை 6 மாதங்களில் 55,658 வெளிநோயாளிகளும், 719 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று சென்று ள்ளனர். இதில் கடந்த 2022-ல் 27 குழந்தைகள் பிறந்துள்ளன. 2023-ல் ஜூன் மாதம் வரை 28 குழந்தைகள் பிறந்துள்ளன. ஜூன் மாதம் மட்டும் 8 குழந்தைகள் பிறந்துள்ளன என நகர் நல அலுவலர் மனோஜ் குமார் தெரி வித்தார்.
- படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துபட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு உறவினரான சிவா அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிவாவுக்கும், பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.
இது குறித்து முருகானந்தத்துக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் தான் இல்லாத நேரத்தில் சிவா வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் தமுத்துபட்டியில் இருந்து வெள்ளைய கவுண்டனூருக்கு ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த சிவா மீது மோதினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவா திடீரென சுதாரித்துக் கொண்டு விலகியதால் உயிர் தப்பினார்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத முருகானந்தம் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு சிவாவின் வீட்டுக்கு சென்று உருட்டுக் கட்டையால் பயங்கரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் முருகானந்தத்துக்கும் காயம் ஏற்பட்டதால் அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மற்றும் இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- அவரது உறவினர்கள் 4 பேரும் பாரதரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
நிலக்கோட்ைட:
நிலக்கோட்டை அருகே எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாரத ரோஜா (வயது 36). இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜா (30) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று பாரதரோஜா வீட்டுக்கு வந்த ஆனந்தராஜ், அவரது உறவினர்கள் குமார், பழனியம்மாள், தோப்புச்சாமி ஆகிய 4 பேரும் பாரதரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் வீட்டுக்குள் வைத்தும் பூட்டினர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜா, பழனியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் ஆனந்தராஜா கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாரதரோஜாவை கைது செய்தனர்.
- எதிரே வந்த காட்டு மாடு அவரை முட்டியதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
- உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நத்தம்:
நத்தம் அருகே செந்துறை மேற்குப்பட்டி மேகாட்டுக்களத்தைச் சேர்ந்தவர் நல்லையா (வயது 55). இவர் மணக்காட்டூரில் காய்கறிகடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக மேற்குப்பட்டியில் இருந்து மணக்காட்டூர் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு மாடு அவரை முட்டி தள்ளியது. இதில் பலத்த படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்தவாறே சென்றனர்.
- பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தவாறே சென்றனர். மேலும் அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது. மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கும்பூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இருளிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- யூகலிப்ட்ஸ் தைலம் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்லும் பொருட்களாகும். இவற்றில் ஒரு சில பொருட்களில் கலப்படம் உள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்.
- கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா போன்ற வகைகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாடுகளைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. கொடைக்கானலில் தயாராகும் ஹோம் மேட் சாக்லேட் வகைகள், ஸ்பைசஸ், டீ தூள் வகைகள் மற்றும் யூகலிப்ட்ஸ் தைலம் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்லும் பொருட்களாகும். இவற்றில் ஒரு சில பொருட்களில் கலப்படம் உள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து திடீர் சோதனை செய்யப்பட்டு தரம் குறைந்த பொருட்கள் வைத்திருப்பவர்களின் மீது உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்தனர். தரம் குறைந்த மற்றும் போலியான பொருட்களை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு பயிற்சி, லைசன்ஸ் மேளா, எளிமையாக கலப்படப் பொருட்களை கண்டறியும் முறை ஆகிய முப்பெரும் விழிப்புணர்வு நிகழ்வினை கொடைக்கானல் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தனியார் அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் லாரன்ஸ், உணவு தர நிர்ணய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் முகமது சையது ஆகியோர் வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்தனர். மசாலா பொருட்கள், டீத்தூள், ஆயில்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றில் உள்ள கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா போன்ற வகைகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தரமான பொருட்களை மட்டுமே விற்க அறிவுறுத்தினர். அனைத்து வியாபாரிகளும் இந்த விழிப்புணர்வு முகாமில் தரமற்ற பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா, வார்டு கவுன்சிலர் அப்பாஸ், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்பொருள் அங்காடி உரிமையாளர் கலந்து கொண்டனர்.
- சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்
- ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சில பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கப்படாத 1, 2, 3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபிஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.
இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதவர்களுக்கு வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை பணிகளில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






