சுகாதார வளாகங்களில் மேயர் ஆய்வு

விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
சுகாதார வளாகத்தை மேயர் இளமதி பார்வையிட்டார்.
சுகாதார வளாகத்தை மேயர் இளமதி பார்வையிட்டார்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் தலா ரூ. 24.96 மதிப்பீட்டில் பூச்சி நாயக்கன்பட்டி, சவேரியார் பாளையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ஹசீனா பர்வீன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com