என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய கோம்பைபட்டி கோவில் திருவிழாவில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்துவந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    பெரிய கோம்பைபட்டி கோவில் திருவிழாவில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி ஜூன் 20ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனை அலங்காரம் செய்து கரகாட்டத்துடன், மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி, பெரிய கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கடுகாபட்டி, சரளப்பட்டி, சின்ன கோம்பைபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


    Next Story
    ×