மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் சாதனை

கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர்.மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

இதில் மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com