search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ropecar"

    • மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன.
    • 10 மணி நேர போராட்டத் துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

    ஈக்வடார்:

    ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப் கார்கள் செல்கின்றன. இந்த நிலையில் ரோப் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கி கொண்டனர்.

    மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன. கோளாறை சரி செய்து ரோப் கார்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கயிறுகள் மூலம் ரோப் கார்களில் தவித்தவர்கள் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குயிட்டோ நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

    • பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
    • முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பழனி:

    பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.

    தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.

    இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.

    முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் ஏகோபித்த ஆதரவை பிடித்த ரோப்கார், 18-ம் ஆண்டு சேவையில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது.
    பழனி:

    தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு வருகை தரும் பக்தர்கள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன.

    மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளது. இதில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ரோப்கார் செயல்பட்டு வருகிறது.

    3-ம் படைவீட்டில் முதலிடம் பிடிக்கும் ரோப்கார் சேவை தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதன்மூலம் வெற்றிகரமாக, 18-ம் ஆண்டில் ரோப்கார் அடியெடுத்து வைக்கிறது.

    படிப்பாதை மட்டுமே பயன்பாட்டில் இருந்த காலத்தில், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அடிவாரத்தில் இருந்து விரைவாக செல்ல அமைக்கப்பட்டது தான் மின்இழுவை ரெயில். இதில் 3 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் அடிவாரத்தில் இருந்து 8 நிமிடத்தில் மலைக்கோவிலை சென்றடையலாம்.

    எனினும் விரைவாக செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு கடந்த 3-11-2004 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா பழனி ரோப்கார் சேவையை தொடங்கி வைத்தார்.

    தமிழகத்திலேயே பழனி முருகன் கோவிலில் மட்டுமே ரோப்கார் சேவை உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. ரோப்காரில், ஒரு மணி நேரத்தில் 400 பேர் வரை பயணம் செய்ய முடியும். மலைக்கோவிலுக்கு செல்வதற்கான பக்தர்கள் தேர்வில் முதலிடத்தை ரோப்கார் பிடிக்கிறது.

    விரைவாக செல்வது மட்டுமின்றி, பழனியை சுற்றியுள்ள வயல்வெளி, மேற்குத்தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி ரோப்காரில் பயணிப்பதே சுகமான அனுபவம் தான். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக ரோப்காரில் பயணித்து வருகின்றனர்.

    தொடக்க காலத்தில் 24 பெட்டிகளுடன் ரோப்கார் சேவை இயங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு மின்வட கயிறு அறுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதன் எதிரொலியாக, 8 பெட்டிகளாக குறைக்கப்பட்டது.

    அதாவது மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் போது 16 பேரும், கீழே வரும்போது 13 பேரும் அமர்ந்து செல்லும் வகையில் ரோப்காரில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரோப்கார் நிலையத்தில் ஆண்டுக்கு 40 நாட்களும், மாதத்தில் ஒரு நாளும், தினமும் ஒரு மணி நேரமும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    தினசரி காலை 7 மணிக்கு தொடங்கும் ரோப்கார் சேவை மதியம் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது. அதன்பிறகு ஒரு மணி நேரம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு சோதனை ஓட்டம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் நிலையத்தின் கீழ் தளத்தில் இருந்து மலைக்கோவில் மேல்தளத்துக்கு 350 மீட்டர் ரோப் (இரும்பு வடம்) அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமே கீழ்தளத்தில் இருந்து ஆபரேட்டர்கள் மூலம் ரோப்கார் இயக்கப்படுகிறது.

    காற்றின் வேகத்தை பொறுத்தே ரோப்கார் இயக்கப்படுவது வழக்கம். இதற்காக மலைக்கோவிலில் காற்றின் வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே காற்று அதிகம் வீசும் நேரங்களில் அதன் சேவை நிறுத்தப்படும்.

    ரோப்கார் நிலையத்துக்கு வரும் பக்தர்கள், குழந்தைகளை கவர்வதற்காக கீழ்தளத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நீரூற்று, புல்வெளி, மான், மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்கு பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் முருகப்பெருமானின் வாகனமான மயில், தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருக்கும் எழில் கொஞ்சும் காட்சியை ரோப்காரில் சென்றபடியே பார்த்து மகிழலாம். பழனிக்கு வருகை தரும் முருக பக்தர்களின் ஏகோபித்த ஆதரவை ரோப்கார் பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

    தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அப்போது பலமணி நேரம் பக்தர்கள் காத்திருந்து ரோப்காரில் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே 2-வது ரோப்கார் சேவை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து மண், பாறை மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. தற்போது 2-வது ரோப்கார் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×