என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திர ஏரி"

    • வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.
    • நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா ஆகிய அருவிகளை கண்டு ரசித்து அருகில் நிற்பதுபோல் செல்பி எடுத்துக் கொண்டனர். வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.

    குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனூர், சுழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் இதமான சீதோசனம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். வாரவிடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடை சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைவாக காணப்படும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .
    • விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு முக்கிய சுற்றுலா இடமாகவும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது, காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா"என பேசிய வாலிபரிடம்.. ஊருக்கு கிளம்பு என்று சொன்னவுடன் அழுதார். இதையடுத்து போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .

    இதையடுத்து விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறினார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×