"நானும் மதுரைக்காரன் தான்டா" - போதையில் வாலிபர் ரகளை

போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
"நானும் மதுரைக்காரன் தான்டா" -  போதையில் வாலிபர் ரகளை
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு முக்கிய சுற்றுலா இடமாகவும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா"என பேசிய வாலிபரிடம்.. ஊருக்கு கிளம்பு என்று சொன்னவுடன் அழுதார். இதையடுத்து போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .

இதையடுத்து விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறினார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com