என் மலர்
தர்மபுரி
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
- ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.
தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.
சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.
திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன்.
- நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பூமி சமுத்திரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. இதை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆகுவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்வேன். புதுசு புதுசா வந்தவர்கள், இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள்.
திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கட்சி பணியாற்றினால் கோட்டை சிறுத்தைகள் வசமாகும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்ப உறவினர்களை இங்கு பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் கதறி கண்ணீர் விட்டு என்னிடம் அழுதார்கள்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் ஆறுதல் கூறுவதற்கு வெறுங்கையோடு வரவில்லை. நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த துயரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கெடுத்து ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
- அ.தி.மு.க களத்தில் நின்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தருமபுரி:
தருமபுரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
கோவை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை ஆகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தெளிவான அறிக்கை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார்.
தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையை அ.தி.மு.க களத்தில் நின்று எடுத்து சென்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகி றார்கள். அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது.
ஆகவே இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் அ.தி.மு.க. அரசு 52 ஆண்டு களாக கடந்து வந்திருக்கிறது. இதுபோன்று பழி வாங்கும் நடவடிக்கைகளால், அ.தி.மு.க. இயக்கத்தையும் இயக்கத் தொண்டர்க ளையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று தி.மு.க நினைத்தால் அது சர்வாதிகார போக்காகும். அது நடக்காது. தி.மு.க அரசுக்கு இது ஒரு நிறைவு காலமும், ஒரு முடிவு கால மாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
- பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தருமபுரி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 21 ஆம் தேதி இரவு தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை கண்டித்தனர்.
இதனால், கோபம் அடைந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த பெண்கள் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார்
- கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தி.மு.க.வில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோடிஅள்ளியைச் சேர்ந்த தர்மசெல்வன் என்பவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கூத்தப்பாடி அருகே கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து கொள்ளப்படுகிறார்கள் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
- இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவில் நீர்வரத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று குறைந்து வினாடிக்கு 1200 கன அடியாக வருகிறது. மேலும் இந்த நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போது வரும் இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வேகம் குறைந்து கொட்டி செல்கின்றன.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
- முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
முத்துராமன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் மற்றும் மனைவியின் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட் ஆகியவற்றுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முத்துராமனின் மனைவி மகளிர் சுய உதவிகுழுவில் தலைவியாக உள்ளார். அவரிடம் துரை தனது குடும்பத்தினருக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து தருமாறு கூறினார்.
அதற்கு அவர், கடன் வாங்கி கொடுத்தால், திருப்பி செலுத்தமாட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரத்தில் துரை, முத்து ராமனின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






