என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்- தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு
    X

    தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்- தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

    • கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார்
    • கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தி.மு.க.வில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோடிஅள்ளியைச் சேர்ந்த தர்மசெல்வன் என்பவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கூத்தப்பாடி அருகே கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து கொள்ளப்படுகிறார்கள் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×