என் மலர்
தர்மபுரி
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக வந்தது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1200 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
- எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார்
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம் நியமித்தது.
இந்த நிலையில் தர்மசெல்வனை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்த 2 நாளில் அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது முடிவதற்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது அண்ணா சிலை அருகே அவரின் ஆதரவாளர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தர்மசெல்வன் பேசியபோது கலெக்டர், எஸ்.பி என்னுடைய பேச்சை தான் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்களையும் மாற்றி விடுவேன்.
எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார் என பேசிய ஆடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
- அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
தருமபுரி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* 234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா?
* 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம்.
* பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா?
* என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
* அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
* காவல் ஆய்வாளரின் தந்தை ராஜீவ் கொலையின் போது இறந்ததற்கு எதுவும் செய்ய முடியாது.
* முதன் முதலில் இந்தி பள்ளியை தமிழகத்தில் திறந்தவர் பெரியார்.
* தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவராக நான் இருக்கிறேன். 230 வழக்குகளை கடந்து விட்டேன்.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சுபவன் நான் அல்ல, எல்லா வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றார்.
- ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
- நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
தருமபுரி:
விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு.
* நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா?
* ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
* கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா?
* எனக்கு திருமணம் ஆகும் போது அதனை தடுத்து நிறுத்தி இருக்கணும்.
* சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான்.
* ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன்.
* நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
* உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
- நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.
- ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?
தருமபுரி:
தருமபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* என் மீதான வழக்கில் மட்டும் காவல்துறை இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?
* நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளது. ஆனால் மூன்றே நாளில் வழக்கை முடிப்பது போல் அவசரம் காட்டத்தேவையில்லை.
* சம்மன் ஒட்டியதுடன் காவல்துறையினரின் பணி முடிந்துவிட்டது.
* வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால் கதவில் சம்மன் ஒட்டலாம். எனது மனைவி இருந்தும் சம்மனை ஒட்டியது எதற்காக?
* ஆட்கள் இல்லாதது போல் அழைப்பாணையை ஒட்டிவிட்டு போலீசார் செல்லலாம். ஆனால் நாங்கள் அதனை கிழிக்கக்கூடாதா?
* கதவில் ஒட்டிய சம்மன் நான் படிக்கவா? பொதுமக்கள் படிக்கவா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யவா?
* நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டியது ஏன்?
* நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.
* ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?
* இன்று மாலை 6 மணிக்கு மேல் வளசரவாக்கம் காவல்நிலையம் செல்வேன் என்றார்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
- ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.
தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.
சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.
திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன்.
- நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பூமி சமுத்திரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. இதை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆகுவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்வேன். புதுசு புதுசா வந்தவர்கள், இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள்.
திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கட்சி பணியாற்றினால் கோட்டை சிறுத்தைகள் வசமாகும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்ப உறவினர்களை இங்கு பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் கதறி கண்ணீர் விட்டு என்னிடம் அழுதார்கள்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் ஆறுதல் கூறுவதற்கு வெறுங்கையோடு வரவில்லை. நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த துயரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கெடுத்து ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
- அ.தி.மு.க களத்தில் நின்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தருமபுரி:
தருமபுரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
கோவை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை ஆகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தெளிவான அறிக்கை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார்.
தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையை அ.தி.மு.க களத்தில் நின்று எடுத்து சென்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகி றார்கள். அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது.
ஆகவே இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் அ.தி.மு.க. அரசு 52 ஆண்டு களாக கடந்து வந்திருக்கிறது. இதுபோன்று பழி வாங்கும் நடவடிக்கைகளால், அ.தி.மு.க. இயக்கத்தையும் இயக்கத் தொண்டர்க ளையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று தி.மு.க நினைத்தால் அது சர்வாதிகார போக்காகும். அது நடக்காது. தி.மு.க அரசுக்கு இது ஒரு நிறைவு காலமும், ஒரு முடிவு கால மாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
- பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தருமபுரி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 21 ஆம் தேதி இரவு தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை கண்டித்தனர்.
இதனால், கோபம் அடைந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த பெண்கள் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.






