என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri accident"

    • வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார்.
    • சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அவரது தாய் சோனியா அலறியடித்து வந்து பார்த்தபோது மகள் அர்திகா பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக சிறுமி அர்திகாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமி அர்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வந்த அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது அரசு பஸ் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது40). இவர் இன்றுகாலை அப்பகுதி பள்ளி அருகில் நடந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார். இவரும் அந்த பள்ளி அருகில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன.
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொப்பூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி பகுதியில் வந்த போது நள்ளிரவு முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில் தொப்பூர் கணவாய் அருகே ஆஞ்சநேயர் கோவிலை அடுத்த இரண்டாவது வளைவில் ராஜஸ்தானில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற வேன் மீது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் வேனில் வந்த மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

    சரக்கு லாரியின் ஓட்டுநர் முரளி அதோடு நிற்காமல் மற்றொரு வாகனம் மீதும் மோதிவிட்டு மீண்டும் அதிவேகமாக சென்றுள்ளார்.

    அப்போது தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்கள் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
    • சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ரீஜா (வயது9). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் நாகனம்பட்டி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் இரண்டு ஈச்சர் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 3 வாகனங்களும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை பராமரிப்பு குழு மற்றும் தொப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

    • ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    காரிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 34). இவர்களுக்கு சரண் (14), தீரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஜோதி பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது கணவர், மகன்களுடன் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோதி, இளைய மகன் தீரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறத்தனர்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த சரணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதியமான்கோட்டை-ஓசூர் வரை தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி அதிக வேகத்தில் வந்துள்ளது. மேலும் சாலையில் போடப்படும் சென்டர் வெள்ளை கோடு இன்னும் போடப்படாத காரணத்தால் டிரைவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    விபத்தில் தொழிலாளியின் மனைவியும், மகனும் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதி ஓசூர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் பலியாகினர். ஒகேனக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 பேரும் விபத்தில் சிக்கிய சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் முனிகிருஷ்ணன் (வயது50). இவர் தனது நண்பர்களுடன், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    இவர்களுடன் காரில் அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் (47), பசவராஜ் (38) மஞ்சுநாத் (47), சந்திரப்பா (50) ஆகியோர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்தனர்.

    அந்த கார் இன்று காலை தருமபுரி அருகே மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் வந்தது. அப்போது சாலை தடுப்புச் சுவரில் மோதி பின்பு அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், காரை ஓட்டி வந்த முனிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அப்போது விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த முனிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காரில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பசவராஜ் மற்றும் சீனிவாஷ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து மகேந்திரமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த பசவராஜ் மற்றும் சீனிவாஸ் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு லாரி மீது மோதி 3 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொப்பூர் அருகே இன்று அதிகாலை இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றி கொண்டு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியை சேர்ந்த பொன் ராஜ் (வயது41) என்பவர் டிரைவராகவும், மகாராஜன் கிளீனராகவும் இருந்தனர்.

    இன்று அதிகாலை தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் மத்திய நார்த்தங்கால் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் பொன்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் மகாராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் தொப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தருமபுரி:

    சென்னையில் இருந்து பருப்பு லோடு ஏற்றி கொண்டு லாரி சேலம் மாவட்டம் ஓமலூருக்கு சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ் (வயது35) என்பவர் டிரைவராகவும், ஸ்டாலின் என்பவர் கிளீனராகவும் இருந்தார்.

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்ட 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீனியா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யு.சி 2-ம் படித்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் கீர்த்தி (19), கன்னிகாராஜ் (20), நெல்வின், ஜான்வில்லியம், அரவிந்த், சம்பத் ஆகியோர் காரில் நேற்று கொடைக்கானலுக்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

    காரை வேலூர் மாவட்டம் கன்னியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (31) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது கார் இன்று அதிகாலை 3 மணியளவில் தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு வந்தபோது முன்னால் சென்ற பஸ் சென்றது. அந்த பஸ்சை கார் முந்த முயன்றபோது பஸ் திடீரென்று பின்னால் வந்த காரை கவனிக்காமல் சாலையின் வலது பக்கமாக ஏறி சென்றது. உடனே பஸ் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பி உள்ளார். இதில் கார் நிலைத்தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கவுரவ்வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த நண்பர்கள், டிரைவர் உள்பட 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுரவ்வை மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர்.

    கவுரவ்வை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவுரவ் பரிதாபமாக இறந்தார். உடனே உடலை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனே அங்கு வந்து கவுரவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலாவுக்கு சென்ற போது உடன் வந்த கல்லூரி மாணவர் இறந்தததால் உடன் வந்த நண்பர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கவுரவ் இறந்த தகவலை அவரது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்த சம்பவம் கவுரவ் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    தருமபுரி:

    தருமபுரி அடுத்துள்ள நாட்டாண்மை புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48.) நிதி நிறுவன அதிபரான இவர் பைனான்ஷியல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சத்யா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார். தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×