search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொப்பூர் கணவாயில் நள்ளிரவு அடுத்தடுத்து விபத்து: 3 வாகனங்கள் மீது மோதி லாரி கவிழ்ந்தது
    X

    தொப்பூர் கணவாயில் நள்ளிரவு அடுத்தடுத்து விபத்து: 3 வாகனங்கள் மீது மோதி லாரி கவிழ்ந்தது

    • தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன.
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொப்பூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி பகுதியில் வந்த போது நள்ளிரவு முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில் தொப்பூர் கணவாய் அருகே ஆஞ்சநேயர் கோவிலை அடுத்த இரண்டாவது வளைவில் ராஜஸ்தானில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற வேன் மீது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் வேனில் வந்த மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

    சரக்கு லாரியின் ஓட்டுநர் முரளி அதோடு நிற்காமல் மற்றொரு வாகனம் மீதும் மோதிவிட்டு மீண்டும் அதிவேகமாக சென்றுள்ளார்.

    அப்போது தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்கள் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×