தொப்பூர் கணவாய் அருகே கண்டெய்னர் லாரி அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதி விபத்து

விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உருக்குலைந்து காணப்படும் லாரியை படத்தில் காணலாம்.
விபத்தில் உருக்குலைந்து காணப்படும் லாரியை படத்தில் காணலாம்.
Published on

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் இரண்டு ஈச்சர் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 3 வாகனங்களும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாலை பராமரிப்பு குழு மற்றும் தொப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com