பாப்பாரப்பட்டி அருகே கார் மோதி தந்தை-மகள் பலி

கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
பாப்பாரப்பட்டி அருகே கார் மோதி தந்தை-மகள் பலி
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ரீஜா (வயது9). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் நாகனம்பட்டி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com