அரூரில் விபத்து- லாரி மோதி 2 பேர் மரணம்

அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
அரூரில் விபத்து- லாரி மோதி 2 பேர் மரணம்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com