தருமபுரி அருகே பள்ளி வேன் மோதி பெண் உள்பட 2 மரணம்

பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி அருகே பள்ளி வேன் மோதி பெண் உள்பட 2 மரணம்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது40). இவர் இன்றுகாலை அப்பகுதி பள்ளி அருகில் நடந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார். இவரும் அந்த பள்ளி அருகில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com