என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மது, மான் கறி விருந்து சாப்பிட்ட மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் மயில்கள் வளர்க்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மான்களுக்கு காய்கறிகள், பழங்கள் கொடுப்பார்கள்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் பூட்டி கிடக்கிறது.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிவாச்சாரியார்கள் தினந்தோறும் வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்கள். மேலும் கோவில் மற்றும் வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி இறைச்சி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ குறித்து அறிந்த விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி வீடியோ பதிவில் இருந்த கோவில் மேலாளர்(பொறுப்பு) சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தமிழர்களுக்கான ஒன்றிய பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கமலநாதன், இளைஞரணி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சிலம்பு சுரேஷ், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம் காந்திசிலை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி செயலாளர் ரத்தினம், தமிழர் படை செயலாளர் ராமு, மாவட்ட வர்த்தக பிரிவு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர துணை செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் ராமன் வாசு உள்பட பலர் கலந்து கொண்டு, வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைகட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தமிழர்களுக்கான ஒன்றிய பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கமலநாதன், இளைஞரணி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சிலம்பு சுரேஷ், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம் காந்திசிலை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி செயலாளர் ரத்தினம், தமிழர் படை செயலாளர் ராமு, மாவட்ட வர்த்தக பிரிவு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர துணை செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் ராமன் வாசு உள்பட பலர் கலந்து கொண்டு, வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைகட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 185 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6,506 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3,716 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 79 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 185 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    இவர்களில் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர், கடலூர் பகுதியை சேர்ந்த 3 செவிலியர்கள், புவனகிரி, கடலூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 7 போலீஸ்காரர்கள், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் 2 பேர், சென்னை, நாகப்பட்டினம், சவுதி அரேபியா ஆகிய பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 3 பேர், கர்ப்பிணிகள் 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இதுதவிர அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி 2 பேர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சிறைக்கைதி ஒருவர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 63 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 98 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,691 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுப்பேட்டை அருகே உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்தவர் நரசிம்மன் மனைவி சரண்யா (வயது 65). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரண்யா, பரிதாபமாக இறந்தார். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன், சரண்யாவின் உடல் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேப்பூரை சேர்ந்த 68 வயது முதியவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். நேற்று மட்டும் 157 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். மேலும் 2,617 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

    பெண்ணாடம் அருகே போலி சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கிய கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் பகுதிக்குட்பட்ட கிராமப்புற மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தங்களது காவல் நிலைய சரகத்துக்குபட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அட்டை பெட்டிகளில் இருந்த 154 போலி சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அந்த கடையின் உரிமையாளரான அதேஊரை சேர்ந்த சர்புதீன் மகன் ஷாஜகான்(வயது 34) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கடைக்கு போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர்கள் யார்? என்றும், இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போது அந்த வீடு பூட்டியே கிடப்பதாகவும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கே.என்.பேட்டை திருப்பதி நகருக்கு சென்றனர்.

    அப்போது அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட 7 வகையான புகையிலை பொருட்கள் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 டன் எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்தவர் யார்? என்றும், அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், எந்தெந்த கடைகளுக்கு எல்லாம் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ரூ.1½ கோடி மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்த பாரதி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே பிரதமரின் கிசான் நிதிஉதவி திட்டத்தில் ரூ.12 லட்சம் மோசடி நடந்துள்ளது. விவசாயிகள் என்று கூறி 38 ஆயிரம் பேர் போலியாக விண்ணப்பித்தது அம்பலமாகி உள்ளது.
    கடலூர்:

    பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய், அவர்களது வங்கி கணக்கில் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் உண்மையான விவசாயிகளின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட, வட்டார அளவிலான வேளாண் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு ரகசிய குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை 1 லட்சத்து 79 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புதிதாக 78 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து சேர்ந்துள்ளனர். இதில் விவசாயிகள் இல்லாதவர்களும் தங்களை விவசாயிகள் என்று சேர்ந்து, இந்த திட்டத்தில் பயன் அடைந்து உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அருகே பிள்ளையார்மேடு, பெரியபிள்ளையார்மேடு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இல்லாத சுமார் 300 பேருடைய வங்கி கணக்கில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த உண்மையான விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி வழங்காமல், விவசாயி இல்லாதவர்களுக்கு எப்படி நிதி உதவி வழங்கலாம் என்று சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இதுபற்றி வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகள் இல்லாதவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி அதிகாரிகள் நேற்று பிரதமரின் கிசான் நிதிஉதவி திட்டத்தில் 4 ஆயிரம் ரூபாய் பெற்றவர்களிடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று உள்ளதா? எனவும், அவர்களது விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 78 ஆயிரம் பேர் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதில் 38 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் 300 பேர் மட்டும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக கண்டறியப்பட்டதும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி பெறாமல் போலி ஆவணம் வைத்து இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களின் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட உண்மையான விவசாயிகள் நேரடியாக உரிய வேளாண்மை அலுவலரிடம் சென்று ஆதார் அட்டை, சிட்டா அடங்கல், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பட்டியலில் பெயரை இணைத்து நிதி உதவி பெறலாம் என்றார். இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நிதி உதவி பெற்றுள்ளார்களா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி அருகே முதியவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 60), இவருக்கும் பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன்(61) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அப்போது விஜயன் நாராயணசாமியின் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 8.12.2017 அன்று ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயன் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு விஜயனிடம் பல தடவை கேட்டு வந்தார். ஆனால் பணம் திருப்பித் தராமல் விஜயன் ஏமாற்றி வந்ததோடு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நாராயணசாமிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விஜயனின் மனைவி சரஸ்வதி (55), மகள் அன்பரசி (30), மகன் மணியரசு (27) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து, விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    கம்மாபுரம்:

    விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் மற்றும் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள மணிமுக்தாற்றில் தமிழக அரசு அனுமதியுடன் மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிமுக்தாறு அணைக்கட்டு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் குவாரி தொடங்கப்பட்டு, லாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் நேற்று மாட்டு வண்டிகளுடன் அணைக்கட்டு அருகே உள்ள மணல் குவாரிக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் மணல் அள்ள தங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பியபடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமண்ட்துரை, தனிப்பிரிவு ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக எங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை. குமாரமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக அரசு மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். அதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் மணல் குவாரிகளில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். அதற்கு இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் பேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    காட்டுமன்னார்கோவில் :

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது.

    இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியைபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன், தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் புகைப்படம் வெளியிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியை சேர்ந்த மாணவர் நி‌ஷாந்த், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ‘10-ம் வகுப்பு தேர்வில் என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி, கடலூரில் சிலைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது விதவிதமான வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் தான். ஒரு அடி முதல் சுமார் 10 அடி வரையிலான சிலைகளை பொதுமக்கள் வாங்கி, வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இதனால் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் கைவினை காகிதகூழ் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள இவர்கள் ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விநாயகர் சிலைகள் விற்பனைக்கும் அரசு தடை விதித்துள்ளதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். சிலைகள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை கைவினை காகிதகூழ் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, குமார், ஒருங்கிணைப்பாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.

    விருத்தாசலம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையம் மற்றும் தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த கொடுமனூர் உள்பட மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டு, வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதை அறிந்த கருவேப்பிலங்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் அறுவடை செய்த நெற்பயிர்களை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக வயல்களில் குவியல், குவியலாக கொட்டி பாதுகாத்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் குவித்து வைத்துள்ளதால் அவ்வப்போது பொழிகின்ற மழையில் நெல் குவியல்கள் நனைந்து முளைத்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்திருந்த நெல்கள் நனைந்து வீணானது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் கொடுமனூர் உழவர் மன்ற தலைவரும், வக்கீலுமான அறிவழகன் தலைமையில் நெல் கொட்டி வைத்திருந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுமனூரில் நேரடி நெற்களை கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஓரிரு நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×