என் மலர்
கடலூர்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த புது வியூகம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 365 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6-ம் வகுப்பு படிக்க 3 மாணவர்களும், கடந்த ஆண்டு 10 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி தற்போது 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த துண்டு பிரசுரத்தில், இது பள்ளி அல்ல 91 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான கோவில், பள்ளிகளுக்கெல்லாம் தாய் பள்ளி, மன்னை மாநகரின் மூத்தப்பள்ளி, பல சாதனையாளர்களை உலகுக்கு அளித்த பள்ளி, குறைந்த மதிப்பெண் பெற்ற கற்றல் திறன் குறைபாடுடைய ஏழை, எளிய குழந்தைகளுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் உன்னதப்பள்ளி, புதிய நல்மாற்றத்தை நோக்கி மாறுபட்ட பரிமாணத்தில் நமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
எனவே 6-ம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது வியூகம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த துண்டு பிரசுரம் தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 365 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6-ம் வகுப்பு படிக்க 3 மாணவர்களும், கடந்த ஆண்டு 10 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி தற்போது 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த துண்டு பிரசுரத்தில், இது பள்ளி அல்ல 91 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான கோவில், பள்ளிகளுக்கெல்லாம் தாய் பள்ளி, மன்னை மாநகரின் மூத்தப்பள்ளி, பல சாதனையாளர்களை உலகுக்கு அளித்த பள்ளி, குறைந்த மதிப்பெண் பெற்ற கற்றல் திறன் குறைபாடுடைய ஏழை, எளிய குழந்தைகளுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் உன்னதப்பள்ளி, புதிய நல்மாற்றத்தை நோக்கி மாறுபட்ட பரிமாணத்தில் நமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
எனவே 6-ம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது வியூகம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த துண்டு பிரசுரம் தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகிறது.
பண்ருட்டியில் வாலிபரை கொன்று கோவிலில் புதைத்த அர்ச்சகர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுளாவுக்கும், பண்ருட்டியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வி.ஆண்டிக்குப்பத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கண்ணதாசன், மஞ்சுளா ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்று, அதில் யார்-யாரிடம் பேசியுள்ளார்கள் என்று ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா பலரிடம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மஞ்சுளா, அதே ஊரில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அர்ச்சகரும், பிரபல ஜோதிடருமான கோபிநாத்(52) என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார். மஞ்சுளா வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும், கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கண்ணதாசன் கண்டித்துள்ளார். இதனால் கண்ணதாசனை தீர்த்துக்கட்ட மஞ்சுளாவும், கோபிநாத்தும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 12-ந்தேதி கண்ணதாசனை சமாதானப்படுத்துவதற்காக கோபிநாத் அவரை வேணுகோபாலசாமி கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது.. பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா போலீசில் புகார் செய்து நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக கோபிநாத், மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 242 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 242 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் என்.எல்.சி. மருத்துவமனை டாக்டர், கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர், 2 மருத்துவமனை பணியாளர்கள், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கடலூரை சேர்ந்த பிரசவித்த தாய், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 83 பேர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 3 நோயாளிகளுக்கும் பாதிப்பு உறுதியானது. இவர்களை தவிர கடலூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 3 போலீசார், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 138 பேர், சென்னையில் இருந்து கடலூர், மங்களூர் வந்த 3 பேர், பெங்களூருவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி., நல்லூரை சேர்ந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 91 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 5 பேர் உயிரிழந்தனர். அதன் விவரம் வருமாறு:-
வடலூர் நொச்சிக்காட்டை சேர்ந்த 65 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், ஆபத்தாணபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் பெண்ணாடம் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த 69 வயது முதியவர், விருத்தாசலத்தை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் பலியானார்கள்.
இருப்பினும் இந்த 3 பேரின் சாவு விவரம் மாவட்ட எண்ணிக்கையில் கொண்டு வரப்படவில்லை.
நேற்று ஒரே நாளில் 383 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இது வரை 5 ஆயிரத்து 233 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 497 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 262 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 70 ஆயிரத்து 54 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8083 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 570 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூரில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் நகராட்சி பகுதியில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று அவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது இந்த பணிக்கு இடையூறாக குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள் சென்றது. இதை பார்த்த அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி, உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து குண்டுசாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர், அதில் சில வியாபார நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதேபோல் சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தாசில்தார், நில அளவையர்கள் சேர்ந்து அளவீடு செய்து, அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் புதைவட கேபிள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மின்சார வாரியத்திடம் தகவல் தெரிவித்து மூட நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிருமி நாசினி தெளிக்கும் பணியை காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) புண்ணியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பண்ருட்டி அருகே ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த 12ந்தேதி காணாமல் போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
காணாமல்போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் லிங்காரெட்டிபாளையத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான வேணுகோபால்சுவாமி கோவில் அறையில் புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த 12ந்தேதி காணாமல் போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
காணாமல்போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் லிங்காரெட்டிபாளையத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான வேணுகோபால்சுவாமி கோவில் அறையில் புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓட்டல் தொழிலாளி கோவில் அறையில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ ரசீது (பில்), மருத்துவ படி வழங்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கடலூர்:
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ ரசீது (பில்), மருத்துவ படி வழங்க வேண்டும் என்று கடந்த 18 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசிடமும், நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கிளை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில உதவி செயலாளர் முத்துக்குமரசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் மணி நன்றி கூறினார்.
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் தங்கமணி (வயது 23). இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து தங்கமணியை கைது செய்தார்.
கடலூரில் வாலிபரை நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புதுநகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் காமராஜ்(வயது 22). இவர் நேற்று இரவு கம்மியம்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு பின்புறம், தனது நண்பர்களான கே.என்.பேட்டையை சேர்ந்த ரவி மகன் தேவா உள்பட 6 பேருடன் சேர்ந்து மது குடித்தார்.
பின்னர், தேவாவின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டுக்கு புறப்பட்டார். மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர். தோவாவும், காமராஜூம் ஜெ.ஜெ.நகரில் வந்தபோது மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் வந்து 2 பேரையும் மறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தேவா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். 5 பேரும் சேர்ந்து தேவாவை சரமாரியாக தாக்கினர்.
இதனை தொடர்ந்து காமராஜையும் தாக்கி, அவரை தங்களது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றனர். குப்பை கிடங்கு அமைந்துள்ள ஸ்ரீராமுலு நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் சேர்ந்து காமராஜை மார்பில் கத்தி, அரிவாளால் வெட்டினர்.
மேலும் அவரது கழுத்தை அறுத்து துடிக்க, துடிக்க படுகொலை செய்தனர். அவர், இறந்ததை உறுதி செய்த 5 நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காமராஜின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொலை சம்பவம் நடந்த ஸ்ரீராமுலு நகர் பகுதி இருள் சூழ்ந்தது என்பதுடன், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. அதோடு காமராஜ் வசித்து வரும் புதுநகர், திருவந்திபுரம் சாலையில் இருந்து கேப்பர் மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி, அவரை மது குடிப்பதற்காக குப்பை கிடங்கு பகுதிக்கு அழைத்து வந்து இந்த படுகொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தப்பி ஓடியவர்களை பிடித்த பின்னரே கொலையின் பின்னணி என்ன? என்கிற முழு விவரம் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமராஜ், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த டிரைவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை பராசக்திகோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்குள் தனது ஆட்டோவுடன் சென்றார்.
பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி, தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து ஆட்டோ மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பார்த்து ஓடி வந்து ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஆட்டோவின் மேல் பகுதி எரிந்து சேதமானது. இதையடுத்து அவரை மீட்டு கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை. அரசு வழங்கிய ரூ.1000 நிவாரண நிதியும் தனக்கு கிடைக்கவில்லை. கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தேன். ஆனால் ஊரடங்கு உத்தரவால் சரிவர சவாரி கிடைக்கவில்லை. போதிய வருமானம் இல்லாததால் தவணையையும் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையில் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் இந்த சம்பவத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், விஜயரங்கன், அக்னி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத், நகர தலைவர் வேலு.வெங்கடேசன், ஊடக பிரிவு ஜனனி ஸ்ரீதர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இந்துக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் மக்களின் மன உணர்வை மதித்து சில ஆலயங்களில் திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையும் சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்கும் உரிய எண்ணிக்கையோடு கடலூர் மாவட்டம் முழுவதும் கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைமை அலுவலகத்தையும், மூத்த தலைவர் நல்லகண்ணு பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று கடலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்டக்குழு நிர்வாகிகள் நாகராஜ், பாக்கியம், அமாவாசை, வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரை கலந்து கொண்டு பேசினார். இதில் வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா, நிர்வாகிகள் ஆதிமூலம், மாயவன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் சித்ரா குமாரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில், ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சசிகுமார், பெருமாள், அய்யப்பன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னப்பராஜ், செல்வராசு, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட 15 பேரை ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் வட்டக்கிளை சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமை தாங்கினார். பட்டுசாமி, அறிவழகி, துரை நடராஜன், துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், நிதி உலகநாதன், சின்னத்துரை, செல்வராசு, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கூடாது என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதோ, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ கூடாது.
ஆகவே விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
மேலும் விழா கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. அந்த கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், கோவில் நிர்வாகத்தினரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர்கள் பிரவின்குமார், விசுமகாஜன் மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






