search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்பாண்ட தொழிலாளர்கள்"

    • மாவட்டங்கள் தோறும் கலை நயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க தொழிற்கூடங்களை அரசு அமைக்க வேண்டும்.
    • மாணவரணி ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் மாநில செயற்குழு கூட்டம், 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் தலைமையில் இன்று நடந்தது.

    பாவலர் கணபதி வரவேற்றார். எஸ்.என்.பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 41 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக அதிகபட்ச 5 சதவீத வட்டியுடன் ரூ.1 லட்சமும், இரண்டாம் கட்டமாக ரூ.2லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

    விஸ்வகர்மா திட்டத்தில் தட்சர்கள், பட்டு தயாரிப்பாளர்கள், குயவர்கள், சிற்பிகள், கொல்லர்கள், கொத்தனார்கள், பொற் கொல்லர்கள், பூட்டு தொழிலாளர்கள், செருப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயன்படும் வகையில் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம்.

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதுப்பானையும் ஒரு புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து விலையில்லாமல் வழங்க வேண்டும்.

    வெண்ணிக்குயத்தியாருக்கு அவர் பிறந்த கும்பகோணத்திலுள்ள வெண்ணிப்பறந்தலை என்ற ஊரில் முழு திருவுருவச் சிலை நிறுவி அரசு விழாவாக ஆண்டு தோறும் நடத்திட வேண்டும்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் நல மாநாட்டில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்குவதை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம்.

    இதே போன்று மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதனை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வேண்டி வலியுறுத்துகிறோம்.

    மாவட்டங்கள் தோறும் கலை நயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க தொழிற்கூடங்களை அரசு அமைக்க வேண்டும்.

    நலவாரியத்தில் இது நாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்கிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

    மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்ற வீட்டிற்கும் அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கும் அடிமனை பட்டா வழங்கிட வேண்டுமாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேண்டி கேட்டுக் கொள்கிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மாணவரணி ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மகேஷ் நன்றி கூறினார். மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் விருது வழங்குகிறார்.

    • தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
    • கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் தலைமையில் இன்று அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புது அரிசியை புது பானையில் பொங்கலிட புதுப்பானையும், அடுப்பும் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும்.

    கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இதில் சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
    • 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    காங்கயம் :

    கார்த்திகை தீபத்திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வருகிற 6-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அகல் விளக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    காங்கேயம் பகுதியில் சம்பந்தம்பாளையத்தில் பாரம்பரியமாகமண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த இரு மாத காலமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல்கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்த்தெடுக்கின்றனர்.

    இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறை போய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது. போதிய களிமண் இல்லாத சூழலும், இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம்,திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சிறிய விளக்குகள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பெரிய மண் விளக்குகள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்து விளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினை கலைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் செம்மண், காற்றுமண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம். நாளொன்றுக்கு தலா ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம்.

    இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது.

    தாலுகா விட்டு பக்கத்து தாலுகாவுக்கு மண் கொண்டு செல்ல முடிவதில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் களிமண் கொண்டு வரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

    ×