search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்
    X
    முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் பேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    காட்டுமன்னார்கோவில் :

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது.

    இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியைபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன், தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் புகைப்படம் வெளியிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியை சேர்ந்த மாணவர் நி‌ஷாந்த், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ‘10-ம் வகுப்பு தேர்வில் என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×