என் மலர்
கடலூர்
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிதம்பரம் தொகுதி பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பாண்டியன் உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைபடி சென்னையில் உள்ள அவரது வீட்டில் பாண்டியன் எம்.எல்.ஏ. தனிமைப்படுத்திக் கொண்டார்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைநகர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 15 நவீன தொலை கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கருவி மூலம் நோயாளிகளின் இதயத் துடிப்பு அலை, இதயத்துடிப்பு விகிதம், சுவாச விகிதம், ஆக்சிஜன் செறிவு மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
இந்த நவீன தொலை கண்காணிப்பு கருவி, கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள கணினி திரையுடன் இணைக்கப்பட்டிருக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாரே, மருத்துவக்குழுவினர் இக்கருவி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லாமல், இக்கருவி மூலம் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு உதவியாக இருக்கும்.
இத்தகைய நவீன தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டால், நோயாளிகளுக்கு தொந்தரவின்றி சிகிச்சையளிப்பதுடன், மருத்துவ குழுவினரும் நோய் தொற்றுக்கு ஆளாகாமல், அவர்களது உடல்நலனும் காக்கப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 129 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 207,40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 19,067 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 237 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 129 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், திருப்பூரில் இருந்து குறிஞ்சிப்பாடி வந்தவருக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த கர்ப்பிணிக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 43 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20,869 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 188 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1824 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் 62-ல் இருந்து 56 ஆக குறைந்துள்ளது.

நெய்வேலியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது நெய்வேலி 6-வது வட்டத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பாவந்தார் ராஜவீதியை சேர்ந்த சுரேஷ்(வயது 33), நெய்வேலி 6-வது வட்டத்தை சேர்ந்த சத்தியசீலன் மகன் ஜெயசூர்யா(22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.9 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கொடுத்த தகவலின்படி திருக்கோவிலூர் தாலுகா வட மருதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால்(59), திருப்பத்தூர் பொம்மிகுப்பம் அண்ணா நகரை சேர்ந்த மாது மகன் ராஜவேல்(37), ராஜ்குமார் மனைவி ஜோதி(28) ஆகியோரும் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மைய இட்லியில் கிடந்த பல்லியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு இன்று காலை உணவாக இட்லி வழங்கப்பட்டது. இதில் ஒரு கொரோனா நோயாளிக்கு வழங்கப்பட்ட இட்லியில் பல்லி இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்த மற்றவர்களிடம் காலை உணவை சாப்பிட வேண்டாம். அதில் பல்லி உள்ளது என கூறி அவருக்கு வழங்கப்பட்ட உணவை மற்றவர்களிடம் காண்பித்தார்.
உடனே அங்கிருந்த ஊழியர்களிடம் சென்று இட்லியில் பல்லி கிடந்த விபரத்தை கூறினர். அதற்கு அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொரோனா நோயாளிகள் 30-க்கும் மேற்பட்டோர் அந்த சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தா டாக்டர் செந்தில்குமார் மற்றும் கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்த கொரோனா நோயாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு வழங்கிய இட்லியில் பல்லி கிடந்தது. இது தொடர்பாக ஊழியர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு டாக்டர் செந்தில்குமார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு வழங்குவதற்காக மாற்று உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் சித்தா சிகிச்சை மையத்துக்கு செல்லுங்கள் நாங்களுக்கு உங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கிறோம் என்றார்.
இதையேற்று கொரோனா நோயாளிகள் சித்தா சிகிச்சை மையத்துக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேத்தியாத்தோப்பு அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). இவரது மனைவி செல்வராணி(45). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே வேல்முருகன் தனது மனைவியுடன் பெரியப்பட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல்-செல்வராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி என்றும் பாராமல் செல்வராணியை சரமாரியாக குத்தினார். இதில் அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து போலீசார் எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த தங்கவேல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அவர் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த தங்கவேல், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதற்கிடையில் நீண்டநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு தங்கவேல், செல்வராணி ஆகிய 2 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஒரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அபு இப்ராஹீம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
கடலூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக சட்டசபைத்தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளோம். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த தெளிவு இல்லை.
பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்,
நெல்லிக்குப்பம் அருகே காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டியில் காய்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த காய்கறிகளை அகற்றிய போது, அங்கு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் லாரியில் இருந்த 2 பேரை பிடித்து, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 42), காராமணிக்குப்பத்தை சேர்ந்த முகமது ஷெரீப்(26) என்பதும், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும், போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக காய்கறி மூட்டைகளுக்கு இடையே புகையிலை பொருட்களை வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத், அக்பர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள், புகையிலை பொருட்களை ஆய்வு செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமார், முகமது ஷெரீப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்துல் ரஷீத், அக்பர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே வீடு புகுந்து மாமியாரை மருமகன் கற்பழித்தார். போலீசுக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 39). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவரை இழந்த ஜானகிராமனின் மாமியார், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமலே அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். இதை பார்த்த ஜானகிராமன், அவரது வீட்டுக்குள் நைசாக நுழைந்து அங்குள்ள ஒரு அறையில் பதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் இயற்கை உபாதை கழித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவரது மாமியார் கதவை பூட்டி விட்டு, தூங்க சென்றார். அந்த சமயத்தில் ஜானகிராமன், தனது மாமியாரை கற்பழிக்க முயன்றார்.
இதில் திடுக்கிட்ட அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். உடனே ஜானகிராமன், தனது மாமியாரை தாக்கி, வாயை பொத்தி அவரை கற்பழித்து விட்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே காயமடைந்த ஜானகிராமனின் மாமியாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை தேடி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த ஜானகிராமன் பயந்து விட்டார். எப்படியும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அச்சமடைந்த ஜானகிராமன், ஒதியடிக்குப்பம் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக கூட்டத்தில் கலைச்செல்வன் எம்எல்ஏ பேசினார்.
விருத்தாசலம்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள்(புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆதியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்து வருகிறார். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும்.மேலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
புவனகிரியில் வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
புவனகிரி சின்னப்ப முதலியார் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் வேல்முருகன்(வயது 42). இவருக்கும் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகள் பானுமதி(39) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பானுமதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அறிந்த புவனகிரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பானுமதியின் தாய் உஷாராணி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள உரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டுக்கு சாப்பிட சென்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு கடலூர்-விருத்தாசலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் புவனேஸ்வரி, கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.