search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைச்செல்வன் எம்எல்ஏ"

    3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம். தேர்தலை சந்திப்போம் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். #vetrivel #dinakaran
    சென்னை:

    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச் செல்வன், பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரனை பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்து சிலிப்பர் செல்லாக செயல்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்வி கேட்டனர்.

    எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டோம் தேர்தலை சந்திப்போம். நாங்கள் அ.தி.மு.க.வுக்கு எதிரான அணி இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் தனி அணி கிடையாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தபோதுகூட அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் மட்டும்தான் எம்.எல்.ஏ. என்று குறிப்பிட்டோம். சட்ட பாதுகாப்பு கேட்டு டெல்லி ஐகோர்ட்டிலும் தொடரப்பட்ட வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கூறியிருந்தோம்.

    இப்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டை மீறி எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் நாங்கள் தகுதி நீக்கம் வழக்கில் மேல் முறையீடு போகாமல் தேர்தலை சந்தித்தோம். இந்த 3 பேர் விவகாரத்திலும் அந்த நடைமுறையை பின்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vetrivel #dinakaran
    ×