search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "3 mlas"

  தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தற்போதைய ஆட்சி தப்பிக்கும் என்று தெரியவந்துள்ளது. #dinakaran #edappadipalanisamy #3mlas

  சென்னை:

  2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியை விட்டு இறங்கியதும் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 18-ந் தேதி அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

  எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அப்போது 122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டனர்.

  அதன்பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியும்- எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றானது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

  எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.


  இதன்பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்த காரணங்களால் 4 தொகுதிகள் காலியானது.

  இப்போதை நிலவரப்படி தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் (சபாநாயகர் நீங்கலாக).

  தி.மு.க.வுக்கு 88 எம்.எல். ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

  இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் கடந்த ஒரு ஆண்டாக டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


  தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனுடன் இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் நம்ப முடியாத நிலை உள்ளதால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

  இதனால் அ.தி.மு.க. அரசு தற்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

  இதற்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுக்கும் விளக்கம் திருப்தி இல்லை என்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.

  22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி நீடிக்கும்.

  இந்த சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 231 ஆகும். அப்போது பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். இதை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயித்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. #dinakaran #edappadipalanisamy #3mlas

  3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம். தேர்தலை சந்திப்போம் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். #vetrivel #dinakaran
  சென்னை:

  டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச் செல்வன், பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

  இந்த நிலையில் அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரனை பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்து சிலிப்பர் செல்லாக செயல்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்வி கேட்டனர்.

  எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டோம் தேர்தலை சந்திப்போம். நாங்கள் அ.தி.மு.க.வுக்கு எதிரான அணி இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் தனி அணி கிடையாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தபோதுகூட அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் மட்டும்தான் எம்.எல்.ஏ. என்று குறிப்பிட்டோம். சட்ட பாதுகாப்பு கேட்டு டெல்லி ஐகோர்ட்டிலும் தொடரப்பட்ட வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கூறியிருந்தோம்.

  இப்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டை மீறி எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் நாங்கள் தகுதி நீக்கம் வழக்கில் மேல் முறையீடு போகாமல் தேர்தலை சந்தித்தோம். இந்த 3 பேர் விவகாரத்திலும் அந்த நடைமுறையை பின்பற்றுவோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #vetrivel #dinakaran
  ×