என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி, கொசு மருந்து அடிக்க வேண்டும். கெடிலம் ஆறு சுடுகாட்டு பகுதி மற்றும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவருக்கு உள்ளே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஆர்.உத்தராபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், நகர்க்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், தினேஷ், சங்கர், தேவராஜீலு, ராஜேந்திரன், மகாலட்சுமி, வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    கம்மாபுரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கம்மாபுரம்:

    அரியலூர் மாவட்டம் கூவத்தூர் அணிகுறிச்சான் சாலையை சேர்ந்தவர் பன்னீர் மகன் தினேஷ்(வயது 23). டிரைவர். இவர், கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டில் இருந்து அழைத்துச்சென்றார். 

    இது குறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ் அந்த மாணவியை திருமணம் செய்ய அழைத்துச்சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தினேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    பெண்ணாடம் அருகே பெண்ணிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.15 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி வள்ளி (வயது 40). முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வள்ளி அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று பெண்ணாடம் வந்த வள்ளி தன்னுடைய கணவர் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அருகில் இருந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.20 ஆயிரம் எடுத்துத் தரச்சொன்னார். அந்த நபர் ரூ.5 ஆயிரம் மட்டும் எடுத்து கொடுத்து விட்டு, வள்ளியிடம் ஏ.டி.எம். மையத்தில் உங்களது பின் நம்பர் பதிவாகவில்லை என்பதால் மீதி பணம் வரவில்லை என்று கூறி, ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    ஆனால் வங்கி கணக்கிற்கு அவரது மகன் விவேக் செல்போன் எண் வழங்கி இருந்ததால், அவரது செல்போனுக்கு ரூ.20 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி சென்றது. இதை அறிந்த விவேக் சென்னையில் இருந்து தனது தாய் வள்ளியிடம் கேட்டுள்ளார். அப்போது, தான் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுத்துள்ளதாகவும், இதை வாலிபர் ஒருவர் எடுத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வள்ளி தான் கையில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தார். ஆனால் அது போலியானது என்று தெரிந்தது. தனக்கு ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொடுத்து விட்டு, தான் சென்றவுடன் தன்னுடைய கார்டில் இருந்து மேலும் ரூ.15 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி இது பற்றி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில நிர்வாகி ஸ்ரீதர், ஓவியர் ஜெயசீலன், நகர துணைச் செயலாளர்கள் மகி, சரண்ராஜ், குமரேசன், ராஜா, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் உள்பட 14 பேர் மீது முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணி துணை செயலாளர் புஷ்பலதா தலைமை தாங்கினார். 

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முல்லைவேந்தன், திருமாறன், திருமார்பன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    தெற்குத்திட்டை பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

    இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்களிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி நேரில் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

    தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்றும் ஊராட்சி மன்ற தலைவிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
    சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் விசாரணை நடத்தினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் விசாரணை நடத்தினார்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்களிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை அவமதித்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
    கொரோனாவால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா 17 லட்சத்து 29 ஆயிரத்தை 774 ரூபாய்க்கான காசோலையை வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆறுதல் கூறினார்.
    கடலூர்:

    நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நடராஜனும், நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த ஜூலியன் குமாரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட போலீசார் மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொரோனாவால் இறந்த நடராஜன், ஜூலியன் குமார் ஆகியோரது குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி போலீசாரின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் ரூ.34 லட்சத்து 59 ஆயிரத்து 547 நிதி திரட்டப்பட்டது.

    இதையடுத்து கொரோனாவால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கொரோனாவால் இறந்த நடராஜன், ஜூலியன்குமார் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா 17 லட்சத்து 29 ஆயிரத்தை 774 ரூபாய்க்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். முன்னதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பாபு பிரசாந்த், சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
    ரெட்டிச்சாவடி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 75). வீட்டில் தனியாக வசித்து வந்த அய்யம்மாளுக்கு, அவரது பேத்தி புதுவை மாநிலம் வில்லியனூரை சேர்ந்த ஆனந்தி, சம்பவத்தன்று சாப்பாடு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அய்யம்மாள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று, அய்யம்மாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் அழைத்து வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வரை ஓடிச்சென்று நின்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கத்தி ஒன்று கிடந்தது. மேலும் அந்த வீட்டுக்குள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார், அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி(30) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அய்யம்மாளின் உறவினர் மகள், வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இதை அய்யம்மாள் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக உறவினர் பெண்ணும், அவரது கணருவம் அய்யம்மாள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை பார்த்த வெங்கடாஜலபதி, வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை ஏன் வீட்டுக்குள் விடுகிறாய் என கூறி அய்யம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததும், அதன் காரணமாக அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாஜலபதியை கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை, எளிமையாக்குவதற்கு தொழில் வணிகத்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து http://easy-bus-i-ness.tn.gov.in/msme என்ற இணையதள முகவரியில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இதன் மூலம் தொழில் முனைவோர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினரிடம் இருந்து புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், நகர ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் இருந்து மனை அல்லது கட்டிட வரைபட அங்கீகாரம், மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய மின் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்று மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் ஆகியவற்றுக்கான சேவைகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பெறலாம்.

    இதனால் தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். எனவே, கடலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிமங்கள் பெற மற்றும் புதுப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உடனே அனுமதி பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பான விவரங்களை கடலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
    புவனகிரி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    புவனகிரி அருகே பெரியபட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் பாக்கியசாமி (வயது 48). இவர் தனது தாயார் மரிய கண்ணுவுடன் (70) உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெத்தநாயக்கன்குப்பத்துக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல பெத்தநாயக்கன்குப்பம் பஸ் நிறுத்தத்துக்கு மரியகண்ணு மட்டும் சென்றார். அங்கு பெரியபட்டுக்கு செல்லும் பஸ் சென்றுவிட்டதால், மீண்டும் உறவினர் வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மரியகண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×