என் மலர்
கடலூர்
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் பாபு, திருமுருகன், சுப்புராயன், துணை தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பையன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு தமிழரசன் உள்பட சி.ஐ.டி.யு., விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யு. மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சங்க மகேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பனைச்செல்வம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செல்லையா, நெடுஞ்சேரலாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன் மற்றும் சிவலிங்கம், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
விருத்தாசலம் அருகே யூ டியூப் பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லையில் நாட்டுத் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆலடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 2 பேர் நாட்டுத் துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிலேந்திரன் மகன் ஸ்டீபன் (வயது 19), நரிக்குறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் விஜய்(28) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஸ்டீபனும், விஜயும் ‘யூ டியூப்’ சேனலை பார்த்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நாட்டுத் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், ஸ்டீபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. யூ டியூப் பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?, ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ராமநத்தம்:
கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீ-சர்ட்டுகள் அணிந்து வலம் வருவதை பார்த்திருப்பீர்கள். சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்தியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?, ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி-விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். டோனியின் தீவிர ரசிகரான இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார். வெளிநாடு சென்றாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் துளிக்கூட குறையவில்லை.
கோபிகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ்சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தார். அதன்படி தனது வீட்டை டோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் டோனியின் படத்தையும் வரைய முடிவு செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன், ரூ.1½ லட்சம் செலவில் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார். கிரிக்கெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும், அவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்து விட்டு, கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 59 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்:
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் கையெழுத்து இயக்கம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, தனது கையெழுத்தை பதிவு செய்து, தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிறைவு பெற்ற 17 பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசியதாவது:-
தமிழக அரசு குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் பெண் சிசு கொலை வழக்கத்தை தடுக்கும் நோக்கில் சிசு கொலையில் இருந்து மீட்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 49, பெண் குழந்தைகள் 111 ஆக மொத்தம் 160 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை திருமணம் தடுப்பு சட்டப்படி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 64 குழந்தை திருமணங்களும், இந்த ஆண்டு இது வரை 59 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கருவிலேயே பாலினம் கண்டறிவதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால் 10 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து இடை நிறுத்தல் செய்யக்கூடாது. தொடர்ந்து கல்வி பயில செய்ய வேண்டும்.
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிக்க கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறந்தால் போற்றவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசினார்.
நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, இணை இயக்குனர் (மருத்துவம்) ரமேஷ்பாபு , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா , மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (கடலூர்) திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என கலெக்டர் முன்னிலையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், செல்வம் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜா, கவிராஜா, கணேசமூர்த்தி ஆகியோர் வாணியம்பாளையம், பண்டாரகோட்டை, கோட்டலாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக வாணியம்பாளையத்தை சேர்ந்த முருகன் (வயது 52), பண்டரக்கோட்டை பாபு (46), சிவலிங்கம் (65), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), புதுப்பேட்டை குணசேகரன் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது வேன்-கார் மோதிய விபத்தில் பண்ருட்டி முதியவர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
மாமல்லபுரம்:
புதுச்சேரியில் இருந்து 6 பேர் சென்னை தியாகராயநகரில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது அதிவேகத்தில் வந்த பார்சல் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் காரில் இருந்த செந்தில் (வயது 40), முருகன் (53), பண்ருட்டியை சேர்ந்த ஜெயராமன் (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உருக்குலைந்த காரில் மேலும் 3 பேர் சிக்கி உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், தீயணைப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் போலீசார், அங்கு சென்று காரில் சிக்கி உயிருக்கு போராடிய ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி (60) பரிதாகமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்து படுகாயம் அடைந்த சுபா (40), சுந்தரவரதன் (52) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்போனுக்கு அக்காள்-தம்பி இடையே நடந்த போட்டியால் ஆன்லைனில் படிக்க முடியாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்
நெல்லிக்குப்பம்:
கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி அடுத்த காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 16), மகன் தனுஷ் (11). இதில் ஸ்ரீநிதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். தனுஷ் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஸ்ரீநிதியும், தனுசும் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படித்து வந்தனர். வீட்டில் உள்ள ஒரே ஒரு செல்போனில் 2 பேரும் படித்து வந்தனர். இதனால் தினமும் முதலில் அந்த செல்போனை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அக்காள், தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. கடந்த 7-ந்தேதி இருவருக்கும் இடையே செல்போனில் பாடம் படிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அவரது பெற்றோர் ஸ்ரீநிதியை கண்டித்தனர். ஆன்லைனில் பாடம் படிக்க செல்போன் இல்லையே என்று மனமுடைந்த ஸ்ரீநிதி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டாள். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீநிதி பரிதாபமாக இறந்தாள்.

நெய்வேலி அருகே தனியார் நிறுவன அதிகாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள கொல்லிருப்பு கிராமத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவரும், நெய்வேலி 29-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவருமான கோபால்(வயது 28) என்பவர் சூப்பர்வைசராக உள்ளார். இவர் நேற்று பணிக்கு சென்றபோது கொல்லிருப்பு காலனி அம்பேத்கர் நகரை சேர்ந்த பழனி மகன் பாலாஜி என்கிற விஜயராஜ்(25), விஜய், அறிவழகன்(30), செக்கான் என்கிற பழனி, பலாக்கொட்டை என்கிற குணசேகர், அய்யப்பன், ராஜ்கபூர் ஆகியோர் வழிமறித்து ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வேலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் கோபாலை அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த கோபால், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, அறிவழகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடலூரில் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அன்னவல்லி பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய பெண், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கிறான். தற்போது அந்த பெண் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், கடலூர் சான்றோர்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் முருகவேல்(24) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே முருகவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு முருகவேலை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததோடு, அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.
கடந்த 10 நாட்களில் கடலூரில் 105 சதவீதம் மழை இயல்பை விடவும் அதிகமாக பதிவாகியுள்ளது. கோவையில் 66 சதவீதமும், நீலகிரியில் 51 சதவீதமும் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.
சென்னை:
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் மழைப்பொழிவு தொடர்பான விவரங்களை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இயல்பாக பதிவாக வேண்டிய மழை அளவு, பதிவான மழை அளவு மற்றும் அதற்கான வேறுபாடு அளவு ஆகியவற்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, கடலூரில் இயல்பாக 48.9 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். இயல்புக்கு அதிகமாக 100.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 105 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல மதுரையில் 55.6 மி.மீ. மழை இயல்பாக பெய்ய வேண்டும். 89.7 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது 61 சதவீதம் அதிகம் ஆகும்.
சிவகங்கையில் 47.4 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 39 சதவீதம் அதிகமாக 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 63.6 மி.மீ. இயல்பான மழைக்கு பதிலாக 27 சதவீதம் அதிகமாக 80.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தர்மபுரியில் 68 மி.மீ. இயல்பான மழைக்கு பதிலாக 21 சதவீதம் அதிகமாக 82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 61.1 மி.மீ. மழை இயல்பாக பதிவாகியிருக்கவேண்டும். 16 சதவீதம் அதிகமாக 70.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாகையில் 45.9 மி.மீ. மழை இயல்பாக பெய்திருக்க வேண்டும். 1 சதவீதம் அதிகமாக 46.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல ஈரோட்டில் 43.7 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். 1 சதவீதம் அதிகமாக 44.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 51.9 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். வேறுபாடு இன்றி 51.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல நாமக்கல்லில் 48.3 மி.மீ. மழை இயல்பாக பதிவாக வேண்டும். வேறுபாடு இன்றி 48.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் இந்த காலக்கட்டத்தில் 56.7 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 91 சதவீதம் குறைவாக வெறும் 5.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல அரியலூரில் 56 சதவீதம், செங்கல்பட்டில் 83 சதவீதம், கோவையில் 66 சதவீதம், திண்டுக்கல்லில் 32 சதவீதம், காஞ்சீபுரத்தில் 62 சதவீதம், கன்னியாகுமரியில் 79 சதவீதம், கரூரில் 29 சதவீதம், கிருஷ்ணகிரியில் 19 சதவீதம், நீலகிரியில் 51 சதவீதம், பெரம்பலூரில் 13 சதவீதம், புதுக்கோட்டையில் 18 சதவீதம் இயல்பை விடவும் குறைவாக மழை பெய்துள்ளது.
ராமநாதபுரத்தில் 32 சதவீதம், ராணிப்பேட்டையில் 92 சதவீதம், தஞ்சையில் 50 சதவீதம், தேனியில் 38 சதவீதம், தென்காசியில் 49 சதவீதம், நெல்லையில் 35 சதவீதம், திருப்பத்தூரில் 80 சதவீதம், திருப்பூரில் 67 சதவீதம், திருவள்ளூரில் 84 சதவீதம், திருவண்ணாமலையில் 45 சதவீதம், திருவாரூரில் 6 சதவீதம், தூத்துக்குடியில் 87 சதவீதம், திருச்சியில் 73 சதவீதம், வேலூரில் 88 சதவீதம், விருதுநகரில் 41 சதவீதமும் இயல்பை விடவும் குறைவான மழை பெய்துள்ளது.

சிதம்பரம் அருகே மின்கம்பத்தில் கட்டி, வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்குதில்லைநாயகபுரம் அழிஞ்சிமேடு சுடுகாடு அருகே உள்ள மின்கம்பத்தில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடை மணல் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ்குமார்(வயது 27) என்பதும், அவரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் வேலைக்காக மீண்டும் சென்னை செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் வடக்குதில்லைநாயகபுரம் அழிஞ்சிமேடு சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்த மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சந்தோஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10 திருநங்கைகளை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே நிலத்தகராறில் பா.ம.க. பிரமுகரை அடித்துக் கொலை செய்த தந்தை-மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன்கள் ராஜவேல் (வயது 65), கோவிந்தசாமி(60), அர்ஜூனன்(55). இவர்களில் அர்ஜூனன் பா.ம.க.வின் தமிழர் உழவர் பேரியக்க கடலூர் மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாக அர்ஜூனன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை(42) ஆகியோர் அர்ஜூனனிடம் உனக்கு குழந்தைகள் இல்லை. எனவே உனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை எங்களுக்கு எழுதி கொடு என்று கேட்டு அடிக்கடி அர்ஜூனனிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜவேல், அண்ணாதுரை ஆகியோர் அர்ஜூனனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜவேல், அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.