என் மலர்
செய்திகள்

கைது
பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு- வாலிபர் கைது
கடலூரில் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அன்னவல்லி பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய பெண், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கிறான். தற்போது அந்த பெண் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், கடலூர் சான்றோர்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் முருகவேல்(24) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே முருகவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு முருகவேலை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததோடு, அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.
Next Story






