என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெய்வேலியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

    நெய்வேலியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது நெய்வேலி 6-வது வட்டத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பாவந்தார் ராஜவீதியை சேர்ந்த சுரேஷ்(வயது 33), நெய்வேலி 6-வது வட்டத்தை சேர்ந்த சத்தியசீலன் மகன் ஜெயசூர்யா(22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த ரூ.9 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கொடுத்த தகவலின்படி திருக்கோவிலூர் தாலுகா வட மருதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால்(59), திருப்பத்தூர் பொம்மிகுப்பம் அண்ணா நகரை சேர்ந்த மாது மகன் ராஜவேல்(37), ராஜ்குமார் மனைவி ஜோதி(28) ஆகியோரும் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×