என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
டாக்டர் உள்பட 129 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 129 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 207,40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 19,067 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 237 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 129 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், திருப்பூரில் இருந்து குறிஞ்சிப்பாடி வந்தவருக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த கர்ப்பிணிக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 43 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20,869 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 188 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1824 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் 62-ல் இருந்து 56 ஆக குறைந்துள்ளது.

Next Story