என் மலர்tooltip icon

    கடலூர்

    • 50 ஆண்டுக்கு பின் பல கோடி சொத்தை ஜமாபந்தி மூலம் முதியவர் மீட்டார்.
    • பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு 3 சகோதரர்கள். இவருக்கு பாத்திமான இவரது குடும்ப சொத்தை இவருக்கு தெரியாமல் இவரது சகோதரர் மூலமாக வேறு ஒருவர் வாங்கியுள்ளார். இவருக்கு அப்போது வயது17. இவருக்கு சொந்தமான இந்த சொத்தை மீட்க 17 வயதில் போராட்டத்தை தொடங்கினார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

    இவரது தொடர் முயற்சியால் பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் தாசில்தார் சிவா கார்த்திகேயனிடம் முறையிட்டார். தாசில்தார் சிவா.கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இவருக்கு பட்டா வழங்கலாம்என்று ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். ஐகோர்ட்டு நீதிபதிகள் இவருக்கு பட்டாவழங்கஉத்தரவுபிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா நகல் தாசில்தாரிடம் இருந்து பெற்ற முதியவர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில் 50 ஆண்டுகால போராட்டத்தில்எனது தம்பி ,எனது மகன் ஆகியோரை இழந்தேன் என்றார்.

    • கொரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டெல்டா மாவட்டங்களில் விவசாய கருத்தரங்கு நடந்தது.
    • நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் நெல்லின் பூச்சி மற்றும் நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார்.

    கடலூர்:

    நெல்லிற்கான குறுவை பருவம் தொடங்கிய திலிறுந்து கொரமண்டல் உர நிறுவனம் பல்வேறு விவசாய கருத்தரங்கு கூட்டத்தினை டெல்டா மாவட்டங்களில் நடத்தியது.

    அதன் அடிப்படையில் கொரமண்டல் உர நிறு வனமும் சிருகமணி மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துடனும் சேர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமத்தில் கடந்த 7-ந் தேதி லால்குடி, 9-ந் தேதி நீடாமங்கலம், 13-ந் தேதி சலிப்பேரி மற்றும் 15-ந் தேதி திருவாருர் போன்ற ஊர்களில்) விவசாய கருத்தரங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளது.

    இக்கூட்டனங்களில் கொரமண்டல் உர நிறு வனத்தின் முதுநிலை உழவியல் நிபுணர் குருசாமி தொடக்க உரையாற்றினார், கொரமண்டல் உர நிறு வனத்தின் விவசாயிகளுக் கான சேவைகள் மற்றும் நிறுவனத்தின் வரலாற்றினை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் தமிழ்செல்வன் மற்றும் பண்ணை மேலாளர் நக்கீரன், நிலம் மற்றும் பருவத்திர்க்கேற்ப நெல்லின் ரகத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். லால்குடி வேளாண்மை துணை இயக்குனர் சுகுமார் கலை ஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பம் சங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் நெல்லின் பூச்சி மற்றும் நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார்.

    கொரமண்டல் உர நிறுவனத்தின் தஞ்சாவூர் விற்பனை அதிகாரி திருப்பதி சீனிவாசன் மற்றும் திருச்சி விற்பனை அதிகாரி ரஞ்சித் கண்ணன் இருவரும் இணைந்து கொரமண்டல் உர நிறுவனத்தின் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை (16:20:00:13, 20:20:00:13, 28:28:00, இன்ஸ்டா, கேரிச், சல்பாமேக்ஸ்) பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.

    கொரமண்டல் உர நிறு வனத்தின் இளைநிலை உழவியல் நிபுணர் முனைவர் மணிவண்ணன் கொர மண்டல் உர நிறுவனத்தின் விவாயிகளுக்கான இலவச மண் பரிசோதனை பற்றியும் நேரடியாக மண்ணின் கர்மச்சத்தை பரிசோதனை செய்து மண்ணின் வளதிர்க்கேற்ப பயிர்களுக்கு உரம் இடுவதை பற்றி எடுத்துரைத்தார். கொரமண்டல் உர நிறு வனத்தின் திருவாரூர் விற்பனை அதிகாரி சுதாகர் நன்றியுரை ஆற்றினார். கொரமண்டல் உர நிறு வனத்தின் களபணியாளர் ஷண்முகம் உடனிருந்தார்.

    • நல்லூர்பாளையம் ஊத்துகாட்டுமாரியம்மன்கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டி, நல்லூர்பாளையத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரிஅம்மன்கோவில்.இங்குஏராளமானபொருள்செலவில்திருப்பணிசெய்யப்பட்டு மகாகும்பாபிஷேம்நடந்தது.இதனை முன்னிட்டு தினமும்மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம்வ ழங்கினார்.

    நல்லூர் பாளையம் தங்கராசு, ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன்,மண்டலபூஜை உபயதாரர் தொரப்பாடி பேரூராட்சி முன்னாள்துணை தலைவர் கனகராஜ் பஞ்சாயத்துதலைவர்சிவசந்திரன்,ஆகியோர்வரவேற்றனர்பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன்,பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன் பண்ருட்டி (வ)ஒன்றிய செயலாளர்சி வாமற்றும்ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • கடலூரில் கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் சவுந்தர்யா (வயது 9). அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் இவரது மகள் தாமரைச்செல்வி (9). இவர்கள் 2 பேரும் தனது உறவினரான ரேணுகா என்பவருடன் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று இரவு ரேணுகா என்பவர் தூங்கி எழுந்து பார்த்தபோது மேற்கண்ட சவுந்தர்யா மற்றும் தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவனாம் பட்டினம் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 சிறுமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் அரசு பாலிடெக்னிக்- மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்துகின்றன.
    • ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை வட்டத்துணைத்தலைவர்கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்ட துணைத்தலைவர்ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார். வட்ட செயலாள ர்கல்யாணசுந்தரம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    மாநாட்டை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அறிக்கையின் மீது விவாதத்தை வாழ்த்திஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் குருமூர்த்தி த ேபசினார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குந்தைவேலு, மாவட்ட துணைத்தலைவர்கள் கருணாகரன், ஆதவன், சிவப்பிரகாசம், மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலு, பச்சையப்பன், வி.சுந்தர்ராஜன், வேளாண்மை துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து வட்ட துணைத்தலைவர்கள்பஷீர், சந்திரசேகரன். ரவிச்சந்திரன். வட்ட இணைச்செயலாளர் ஜோதி ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் புதிய வட்டக்கிளை நிர்வாகிகளாக தலைவராக பத்மநாபன். செயலாளராக ராமதாஸ். பொருளாளராக குலசேகர மணவாள ராமானுஜம், துணைத்தலைவர்களாக கிருஷ்ணமூர்த்தி, பஷீர், சந்திரசேகரன்ர, விச்சந்திரன், ராமசாமி. இணைச்செயலாளர்களாக ஜோதி, விஸ்வலிங்கம், முருகேசன்,அரிக்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர்மனோகரன் பேசினார். வட்ட இணைச்செயலாளர்ரா மசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும்.கடலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
    • வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகம் முன்பு நடந்தது. கல்லூரியின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன்,

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன்..ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமநாதன்.புவனகிரி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர்டாக்டர் மனோகர்ஆ கியோர்முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்.இந்த பட்டமளிப்பு விழாவில்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு 608 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    பட்டமளிப்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் சபாபதி முருகன், பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்.பினர் கிள்ளைரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவ மாணவிகள்பெற்றோர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.முடிவில் உதவி முதல்வர்மீனா நன்றி கூறினார்.

    • ரேசன் கடைகளில் இ.சேவை மையங்களை நடத்த இயலாது: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் அறிவித்தூர்.
    • கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சலுகை, உரிமை வழங்க கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த அகவிலைப்படி பெற்று வந்தனர்.

    கொரோனா காலத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. தலைமை அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.

    கடந்த ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 90 சதவீத பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜூன் 10ம் தேதி 7 அம்ச கோரிக்கையுடன் காத்திருப்பு போராட்டடம் நடத்தினோம். அன்று முத-அமைச்சரை சந்திக்க இயலவில்லை.

    தலைமை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக, முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து, ரேசன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அரசு பணியாளர்களில் மிகவும் பலவீனமான பகுதியினர் என சத்துணவு, துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் பேர் உள்ளனர். அத்தகைய ஊழியர்கள் எல்லா அரசு பணியாளர்கள் போல் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வது கிடையாது.

    அத்தகைய பணியாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விரும்பாத பொருட்களை தலையில் கட்டும் சூழல் இருப்பதால் சில சிக்கல்கள் வருகிறது. மக்களின் விருப்பத்தை ஆண்டு தோறும் கேட்டு, வழங்கினால் பிரச்னைகள் வராது. கருவிழி திரை மூலம் பொருட்கள் வழங்கும் முறைக்கு வரவேற்கிறோம். நுாறு சதவீத கணினி மயமாக்கம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.

    கணினி மயமாக்கத்தில் மில்லில் இருந்து பொருட்கள் குடோனுக்கும், குடோனில் இருந்து ரேசன் கடைக்கு வரும் வரை ஆய்வு செய்வதிற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. தவறுகள் தொடங்கும் இடத்தில் ஆய்வு செய்தால், ஒட்டுமொத்தமாக தவறில்லாத நிர்வாகம் நடக்கும்.

    கணினி மயமாக்கத்தில் சில குறைகள் உள்ளது. எல்லா கடைகளிலும் மோடம் இல்லை. பழைய பி.ஓ.எஸ்., மிஷின்கள் உள்ளது. தரமான பி.ஓ.எஸ்., மிஷின்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்சிவக்குமார், மாநில பொருளாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேப்பூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செல்லியம்பாளையம் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவரது மனைவி நாச்சியம்மை,( வயது52). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நாச்சியம்மை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் முதல் தளத்தின் மேற்கூரையில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் வள்ளியப்பன் வேப்பூர் பஸ் நிலையம் அருகேயுள்ள தனது மெடிக்கலில் இருந்தவர் தனது மனைவிக்கு பலமுறை போன் செய்தும் அவர் போன் எடுக்காததால், வீட்டிற்கு வந்த வள்ளியப்பன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    பண்ருட்டி அருகே வைகுண்டவாசபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஆ.நத்தம் (எ)அலர்மேல்மங்கைபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வைகு ண்ட வாசல் பெருமாள் கோவில். இதுமிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. நேற்று 4-ம் நாள் உற்சவம் காலை பல்லக்கில் வைகுண்ட வாச பெருமாள் முரளி கிருஷ்ணன் அலங்காரத்தில் வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதன் முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் வரும் 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர், செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பண்ருட்டியில் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால்பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார். 

    • அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

    • புவனகிரியில் ஆபத்தான பயணத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    புவனகிரி- குறிஞ்சிப்பாடி செல்லும் முக்கிய பிரதான சாலை. இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், வாகனங்கள் செல்வது வழக்கம்.

    இந்த சாலையில் மேல மணக்குடி என்னும் இடத்தில் குறுகிய வளைவு உள்ளது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது. இதனை அறிந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் மழை காலங்கள் ஆரம்பித்துவிடும், அப்படி கனமழை பெய்ய தொடங்கினால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த வழியாக கடலூர், பாண்டி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இதனை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு சென்றுள்ளார். மாவட்ட கலெக்டர் எந்த நிலையில் இந்த பணியை பார்த்தாரோ அதே நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆகையால் அகலப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×