பண்ருட்டி அருகே வைகுண்டவாசபெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

பண்ருட்டி அருகே வைகுண்டவாசபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வைகுண்டவாச பெருமாள் முரளிகிருஷ்ணன் அலங்காரத்தில் வீதிஉலா காட்சி  நடைபெற்றது.
வைகுண்டவாச பெருமாள் முரளிகிருஷ்ணன் அலங்காரத்தில் வீதிஉலா காட்சி நடைபெற்றது.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஆ.நத்தம் (எ)அலர்மேல்மங்கைபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வைகு ண்ட வாசல் பெருமாள் கோவில். இதுமிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. நேற்று 4-ம் நாள் உற்சவம் காலை பல்லக்கில் வைகுண்ட வாச பெருமாள் முரளி கிருஷ்ணன் அலங்காரத்தில் வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதன் முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் வரும் 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர், செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com