கடலூரில் பரபரப்பு: கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயம்

கடலூரில் கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.
கடலூரில் பரபரப்பு:  கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் சவுந்தர்யா (வயது 9). அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் இவரது மகள் தாமரைச்செல்வி (9). இவர்கள் 2 பேரும் தனது உறவினரான ரேணுகா என்பவருடன் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று இரவு ரேணுகா என்பவர் தூங்கி எழுந்து பார்த்தபோது மேற்கண்ட சவுந்தர்யா மற்றும் தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவனாம் பட்டினம் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 சிறுமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com