என் மலர்
கடலூர்
- கடலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு 2 மகன்களுடன் பெண் தீ குளிக்க முயன்றார்.
- எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி காவேரி. இவர் தனது 2 மகன்களுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பெட்ரோல் கேனை கைப்பற்றினர். காவேரியின் கையில் மனு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கடந்த ஆண்டு இறந்து போனார். அதற்கு முன்பு எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனது கணவர் இறந்த பின்பும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனது 2 மகன்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். இதற்கு எனது உறவினர் ஒருவரும் உடந்தையாக உள்ளார். எனவே எனக்கும், எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.
கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.
- 10-ம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் வெளியானது. கடலூர் மாவட்டத்தில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 34,391 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17,834 பேரும், மாணவிகள் 16,557பேரும் அடங்குவர்.இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 30,816 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்கள் 15,274 பேரும், மாணவிகள் 15,542 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.60 சதவீதம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில் 12,877 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 84.57 சதவீதம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.
- கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022-க்கான கால அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப் பட்டுள்ளது.அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 9 ந்தேதி நடைபெறவுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் -01, ஊராட்சி மன்றத்தலைவர் -04, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-26, ஆகிய 31 காலி பதவியிடங்களுக்கு தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2022-க்கான கால அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 9 ந்தேதி நடைபெறவுள்ளது. மேற்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 04142-284562 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- கடலூரில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
- மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
சென்னையில் பெண்கள் அணியும், திருச்சியில் ஆண்கள் அணியும் பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட மாணவ, மாணவியர் அணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார்.
இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கினார். சுப்புராயன், காசி, தயாளன், பயிற்சியாளர்கள் கோவிந்தராஜன், மோகன சந்தர், செங்குட்டுவன், வினோத்குமார், சதீஷ், தமிழிசை மற்றும் முத்து கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் பாலாஜி நன்றி கூறினார்.
- நேற்று மாலை கோவிலுக்குள் பூசாரி தூக்கில் பிணமாக தொங்கினார்.
- கோவில் பூசாரி ஆறுமுகம் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலுார் மாவட்டம், நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 21-ல் உள்ள வாசகர் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், (வயது 45) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நெய்வேலி வட்டம் 21ல் உள்ள நாக கன்னியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் ஆறுமுகம் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆறுமுகத்தின் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பினர்.
எனினும் கோவில் பூசாரி ஆறுமுகம் எதற்காக தற்கொலை செய்தார்? யாராவது அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீன்கள் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி: தடை காலத்துக்கு பின் கடலுக்கு சென்றனர் மீன்கள் வரத்து குறைவால் மீனவர்கள் ஏமாற்றம்
- மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர்.
கடலூர்:
வங்ககடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15 முதல், ஜூன்.14-ந் தேதிவரை கடலில் மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீன்கள் இனவிருத்தி செய்யும் என்ற நோக்கில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனவே இந்த தடைகாலத்தில் பைபர் மற்றும் கட்டுமர படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர். ஆழ்கடலில் மீன் பிடிக்ககூடிய விசை படகுகள் துைறமுக பகுதியில் ஓய்வு எடுத்தது. மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.
எனவே கடந்த 15-ந் தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சுபஉப்பலவாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர். ஆனால் குறைந்த அளவு மீன்களே கிடைத்ததல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறை முகத்தில் மீன்கள் விலை அதிகமாக இருந்தது. குறிப்பாக 1 கிலே வஞ்சரம் மீன் ரூ.700 ல் இருந்து 1000 மாகவும், சங்கராமீன் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆகவும், பாறை மீன் ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக இருந்தது.
மீன்பிடி தடைகாலத்தில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இன்று மீன்கள் வந்ததால் ஓரளவு விலை குறைவாக இருக்கும் என்று கருதி கடலூர் மக்கள் கடலோர பகுதிக்கு சென்றனர். ஆனால் மீன்கள் விலை உயர்வால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
- சிதம்பரத்தில் துணிகரம்: நகை வாங்குவது போல் நடித்து நகை கடையில் 5 பவுன் கொள்ளை அடித்து சென்றனா்.
- நகையை எடுப்பதுபோல் நடித்து நகையை திருடிக் கொண்டு ஓடிய வாலி பரை தேடி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் ராஜா என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மோட்டார் சைக்கிளின் என்ஜினை அணைக்காமல் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று செயினை பார்த்துள்ளார்.
பின்னர் நகையை எடுப்பதுபோல் நடித்து திடீரென கடையில் இருந்த சுமார் 5பவுன் தங்க செயினை எடுத்துக்கொண்டு ஓடி மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் நகர போலீசார்அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படை யில் நகையை எடுப்பதுபோல் நடித்து நகையை திருடிக் கொண்டு ஓடிய வாலி பரை தேடி வருகின்றனர்
- கடலூர் அருகே மகன்களை பள்ளியில் சேர்க்க முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
- உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் அருகே உள்ள, மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.அவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள, ஒரு அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஜெயச்சந்திரன் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகன்களை, தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத ஏக்கத்திலிருந்த சுந்தரி,சம்பவத்தன்று, வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சுந்தரி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்த புகாரின்பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்.எல்.சி. நிறுவனத்தில் நெ ய்வேலி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் ஏற்கப்பட்டது
- என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
கடலூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் வடக்குத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.ஒன்றிய தலைவர் தவநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் என்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமன், ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் வேலு, ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் பாலவிஜய், மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜசிம்மன், தமிழ்ச்செல்வன், குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இந்திரஜித், இளைஞர் சங்க நிர்வாகிகள் பாபு கனேசன், மாயகிருஷ்ணன், முருகானந்தன், மணிகண்டன், உள்ளிட்ட பா.ம.கவினர் பலர் கலந்து கொண்டனர் ஒன்றிய பொருளாளர் மோட்சராக்கினி நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெய்வேலி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது எனவும் நெய்வேலி வடக்கு ஒன்றியம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் செய்வது.
என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.என்.எல்.சி. மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்எல்சி நிறுவனம் உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கப்படும்உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
- விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும் வழங்கினார்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கருங்கூழி ஊராட்சியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம் ஆகிய வட்டங்களில் வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார்அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புற பெண்களின் தொழில் முணைவோர் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது மக்கள் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்னற்ற திட்டங்களை செய்யப்படுத்தி வருகிறார்.
வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையினையும், 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் ஆக மொத்தம் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது.
கிராமப்புற ஏழை பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் விதவை பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1400 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 46 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டங்களை கிராமப்புற பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதர் பழனி, ராமராஜ், பாண்டுரங்கன், ராஜாராமன், ராமதுரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜாமணி, கலைச்செல்வன், புருஷோத்தமன், ரஞ்சித், சதா, விக்கி, உமாபதி, ஆறுமுகம், லட்சுமி நாராயணன், கலைச்செல்வி, வசந்தராணி, ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.






