என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே, தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவில், ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம். தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்புராயன், ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், நிர்வாகிகள் வைத்திலிங்கம், ஆனந்த், பால்கி, தட்சிணாமூர்த்தி, தமிழ்மணி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். 

    • கடலூரில் உள்ள லாட்ஜ் அறையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. கடந்த 18-ந் தேதி 40 வயது வாலிபர் ஒருவர் தொழில்ரீதியாக தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அறையில் தங்கியுள்ளார். ஆனால் 18 -ந்தேதி அறைக்கு சென்றவர் 2 நாட்களான நிலையில் அறையிலிருந்து வெளியில் வராததால் லாட்ஜில் பணிபுரிந்த ஊழியர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்தார். இதனை தொடர்ந்து இறந்த நபரின் உடலை போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் வயது 41 என்பது தெரியவந்தது.

    கடந்த 18-ந் தேதி கடலூருக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லாததால் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை தேடி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
    • இந்த பள்ளியில் 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தற்ேபாது வெளியான தேர்வு முடிவுகளில் 203 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளி மாணவி பி.பூஜா 585 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும், மாணவிகள் டி.நிரஞ்சனா, எஸ்.ஓவியா ஆகியோர் 582 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் ஐஸ்வர்யா, ஏ.மணிபாலன், வி.ஆனிஜெர்லின் ஆகியோர் 575 மதிப்பெண்களுடன் 3-ம் டத்தையும் பிடித்தனர்.

    மேலும் வேதியியலில் 9 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் உயிரியலில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஆர்.புனிதவள்ளி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ்.செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 203 மாணவர்களில், 95 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 24 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 6 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுயோகா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் வாலண்டினா

    லெஸ்லி முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் வள்ளலார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    • செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை வள்ளலார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி கடந்த 8ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுசாதனை படைத்து வருகிறது.மாணவி மதுமிதா 589 மதிப்பெண்களும், மோனிகா 583 மதிப்பெண்களும், காயத்ரி 578 மதிப்பெண்களும், அய்யப்பன் 576 மதிப்பெண்களும், அருள்மணி 576 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 550க்கு மேல் 22 மாணவ-மாணவியர்களும் 500க்கு மேல் 68 மாணவ-மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஜனனி 485 மதிப்பெண்ணும், ஜனா 481 மதிப்பெண்ணும்,எழிலரசி 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து–ள்ளனர் 470 க்கு மேல் 12 மாணவர்களும், 450 க்கு மேல் 29 மாணவர்களும் 400க்கு மேல் 68 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனைமாணவ, மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர்நடராஜன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமால்வளவன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாளாளர் சக்கரவர்த்தி,பொருளாளர் ராஜா, வள்ளலார் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜேந்திரன், மற்றும் கண்ணன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், மணிவாசகம், சாரங்கபாணி, திருவேங்கடம், சரவணன், செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    • வடக்குத்து ஊராட்சியில் புதிய ரேஷன் கடை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்தார் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி என்.ஜெ.வி நகர், மாருதி நகர், சபாபதி நகர், பவுனாம்பாள் நகர், காந்தி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களைபெறுவதற்கு அண்ணா கிராமம் ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் சென்று வந்தனர். இதனால் மேற்கொண்ட நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வை சந்தித்து என்.ஜெ.வி நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்த உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று என்.ஜெ.வி நகரில் புதிய ரேஷன் கடை அமைக்க உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து வடக்குத்து ஊராட்சி அண்ணா கிராமம் கடை பிரிக்கப்பட்டு 1050 குடும்ப அட்டை தாரர்ககு புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், குடிமை பொருள் இணை இயக்குநர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரோகிணி ராஜ், சேராகுப்பம் கூட்டுறவு வங்கி செயலாளர் பொறுப்பு குமுதவல்லி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் மணமகிழ் சுந்தரி கருணாநிதி, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆனந்த் ஜோதி, ஏழுமலை, முன்னாள் தொமுச தலைவர்கள் சிவந்தான் செட்டி, வீர ராமச்சந்திரன். வடக்குத்து கிளை கழக செயலாளர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், மணிகண்ட ராஜா ராஜேந்திரன், நடராஜன் பிச்சை, அந்தோணி தாஸ், சங்கர், விஜிஆர், சந்திரசேகர், சுரேஷ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் விழா சிறப்புரை ஆற்றினார்.

    கடலூர்:

    கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார். விழாவில் பெரியார் கலைக் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகள் 2062 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பெரியார் கலைக் கல்லூரியில் அனைத்து துறைத் தலைவர்கள், நூலகர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பட்டம்பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி நன்றி உரை ஆற்றினார்.

    • கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக சுசான்லி டாக்டர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது.

    கடலூர்:

    புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் ரிசர்ச் சென்டரின் 25 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது. விழாவிற்கு தி சுசான்லி குழுமத்தின் சேர்மனும், கவுன்சிலின் நிறுவனத் தலைவருமான டாக்டர் ரவி தலைமை தாங்கினார். இதில் 25-ம் ஆண்டின் தலைவராக தி சுசான்லி குரூப்ஸின் சேர்மன் டாக்டர் ரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    செயலாளராக ராஜலிங்கம் , பொருளாள ராக அனந்தகிருஷ்ணன், உதவி தலைவராக மனோஜ், இணைபொருளாளராக கிருஷ்ணசிவசலபதி, இணை செயலாளர்களாக சுந்தரமூர்த்தி மற்றும் நெல்லை ஆசுகவிநவநீதகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக புகழேந்தி, பீலிப்ராஜ்ரவி, சாராதாஸ்ரீ, சுகன்யா, அசோக்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பேராசிரியை டாக்டர் உஷாரவி " பிரைன் ஃபாக் " என்ற டிங் ஜாங் புராஜக்ட் 2-வது முறையாக தொடங்கினார். புதிய நிர்வாகிகள் பொறுப்பு பெற்றவுடன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மண்டல உதவி தலைவர்கள் மற்றும் உயர்மட்டக்குழு ஆகியவற்றை டாக்டர் ரவி அறிவித்தார். உயர்மட்டக் குழுவின் தலைவராக தி சுசான்லி குழும இணை இயக்குனர் பேராசிரியை டாக்டர் உஷாரவி , இணை தலைவராக அறிவழகன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அரசு அக்குபஞ்சர் நிபுணர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். அக்குபஞ்சர் அறிவியல் ஆய்விற்கென தனிநிதி ஒதுக்க வேண்டும். பட்டம், பட்டயம் போன்ற அக்குபஞ்சர் பயிற்சியினை அரசு கல்லூரிகளில் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் நிபுணர்கள் பங்கேற்றனர். முடிவில் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 350 மனுக்கள் வரப்பெற்றன.பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும்.

    அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் அலுவல–ர்களுக்கு உத்தரவிட்டார். கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட , மாநில அளவிலான குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியப்போட்டி ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.4,500 ம், மூன்றாம் பரிசு ரூ.3,500 வீதம்; மொத்தம் 15 மாணவர்களுக்கு அதற்கான காசோலையினையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர்.
    • ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை.

    கடலூர்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவில் வரவு-செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு செய்வோம் என்றும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நோட்டீசு வழங்கினர்.

    இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7, 8-ந் தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை. வரவு-செலவு கணக்குகளையும் காட்டவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி சென்றனர்.

    இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் ஆலோசனை மற்றும் கருத்து கூறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இதன்படி கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் இன்று (திங்கட்கிழமை ), நாளை (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் நேரில் ஆலோசனை மற்றும் கருத்துகளை கூறலாம். இது தவிர தபால் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி இன்று காலை துணை ஆணையர் மின்னஞ்சலில் 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. இதுதவிர நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் நேரில் மனு கொடுக்க வந்தனர். இதனால் துணை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. நாளை மாலை வரை மனுக்கள் வழங்க அவகாசம் உள்ளதால் இன்னும் ஏராளமான மனுக்கள் குவிய வாய்ப்பு உள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி தரிசனம் தடை குறித்து விசாரணை நடத்த வேண்டும் காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்தார்
    • கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா இந்து அறநிலையத் துறை அதிகாரியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் சுவாமி தரிச னத்திற்கு தடைவிதித்தது காரணம் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். ஆயிரங்கால் மண்ட பத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடை பெற்ற திருமணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    கோவிலில் உள்ள பல்வேறு இடங்களை இடிப்பதற்கு தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையில் அனுமதி பெறாமல் இடித்த தை குறித்து விசாரணை நடத்தி தீட்சிதர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×